VI யின் ஒரே ரீச்சர்ஜில் நான்கு பேருக்கு கிடைக்கும் அன்லிமிடெட் டேட்டா, காலிங் மற்றும் OTT நன்மை

Updated on 26-Nov-2024
HIGHLIGHTS

Vodafone Idea Limited (VIL) கஸ்டமர்களுக்கு பல விருப்பங்களை கொண்டு வந்துள்ளது

Vi Max Family 1201 திட்டத்தின் மூலம் இந்த ரீசார்ஜ் திட்டத்தின் மூலமாம் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் பயன்படுத்த முடியும்

இந்த திட்டத்தில் கிடைக்கும் நன்மை பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.

Vodafone Idea Limited (VIL) கஸ்டமர்களுக்கு பல விருப்பங்களை கொண்டு வந்துள்ளது அதும் நீங்கள் போஸ்ட் பெய்ட் கஸ்டமாரக இருந்தால் இது மிக சிறந்ததாக இருக்கும். அதாவது ஒரே ஒரு ரீச்சர்ஜில் மொத்த குடும்பமும் நன்மை அடையாளம்

அதாவது Vi Max Family 1201 திட்டத்தின் மூலம் இந்த ரீசார்ஜ் திட்டத்தின் மூலமாம் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் பயன்படுத்த முடியும் மேலும் இந்த திட்டமானது அனைத்து லைசன்ஸ் செய்யப்பட்ட ஏரியா (LSAs) கஸ்டமர்களுக்கு இது கிடைக்கும் இதன் மூலம் அதிகபட்ச டேட்டா உடன் OTT (over-the-top) நன்மை பெறலாம் சரி வாங்க இந்த திட்டத்தில் கிடைக்கும் நன்மை பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.

vodafone Idea (VI) யின் 1201ரூபாய் கொண்ட பேமிலி போஸ்ட்பெய்ட் திட்டம்.

வோடபோன் ஐடியாவின் ரூ,1201 திட்டத்தில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் மாதந்திரம் 3000 SMS வழங்கப்படுகிறது. இதன் மூலம் அதிகபட்சமாக 140GB யின் டேட்டா FUP (fair usage policy) யின் படி 12 AM முதல் 6 AM வரையிலான அன்லிமிடெட் டேட்டாவுடன் 200GB டேட்டா ரோல்ஓவரையும் வழங்குகிறது. கூடுதல் சிம் கார்டுகள் குடும்ப உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொள்ள 20 ஜிபி டேட்டாவைப் வழங்குகிறது.

Vi-1201-.jpg

VI யின் OTT நன்மை

இதில் OTT நன்மை பற்றி பேசினால், Vi Movies & TV(இலவசமாக முதல் மூன்று மாதங்களுக்கு வழங்கப்படும்) இதை தவிர Amazon Prime சப்ச்க்ரிப்சன் 6 மாதங்களுக்கு, Disney+ Hotstar யின் 1 ஆண்டு வரை வழங்கப்படும், மேலும் SonyLIV 360 நாட்களுக்கு கிடைக்கும்,SunNXT யின் 1 ஆண்டு வரை இருக்கும் இதை தவிர வருடம் Swiggy, 1 வருடம் EazyDiner, 1 வருடம் EaseMyTrip மற்றும் 1 வருட நார்டன் மொபைல் செக்யுரிட்டி . இங்கு குறிப்பிடப்பட்டுள்ள இலவசங்களில் ஏதேனும் இரண்டை மட்டுமே பயனர்கள் தேர்வு செய்ய முடியும் என்பதை நினைவில் கொள்ளவும்.

VI யின் மற்ற திட்டம்.

மேலும் நீங்கள் இது போன்ற திட்டத்தை பெற விரும்பினால் பல திட்டங்கள் இருக்கிறது அதாவது நீங்கள் ஐந்து சிம் கனெக்சன் வசதியை பெற விரும்பினால், ரூ,1401 திட்டத்தை நீங்கள் எடுக்கலாம் ஒரு வேலை இந்த திட்டத்தின் விலை மிகவும் அதிகம் என நினைத்தால் ரூ,701 வரும் இரண்டு கனெக்சன் திட்டத்தை பெறலாம் மேலும் VI யின் போஸ்ட்பெய்ட் திட்டத்தில் 5G நன்மை வழங்கவில்லை, குறிப்பாக Jio மற்றும் Airtel தங்கள் போஸ்ட்பெய்டு மொபைல் திட்டங்களுடன் வரம்பற்ற 5G டேட்டாவை கூடுதல் கட்டணமின்றி வழங்கும்போது பயனர்களுக்கு இது ஒரு குறைபாடாகும். Vi இன் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்கள் தங்கள் சிம்மை ப்ரீபெய்டில் இருந்து போஸ்ட்பெய்டுக்கு மாற்றுவதற்கான கோரிக்கையை வைக்கலாம், அதே நேரத்தில் புதிய பயனர்களுக்கு போஸ்ட்பெய்டு சேவைகளும் கிடைக்கின்றன.

இதையும் படிங்க:Jio யின் ஸ்பெசல் ஆபரின் கீழ் இந்த சேவை உங்களுக்கு 50 நாட்களுக்கு கிடைக்கும்

Vi-Family-plan.jpg
Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :