Vodafone Idea யின் புதிய திட்டம் குறைந்த விலையில் கிடைக்கும் பல நன்மை

Updated on 08-Oct-2024

Vodafone Idea நிறுவனம் Reliance Jio மற்றும் Airtel உடன் மோதும் விதமாக புதிய சப்ஸ்க்ரிப்சன் திட்டத்தை கொண்டு வந்தது, நிறுவனம் இந்த திட்டத்தை Vi Super Pack என அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தில் நீங்கள் 15க்கும் மேற்பட்ட OTT இயங்குதளங்களின் பலனைப் பெறலாம் . இது SonyLIV, ZEE5, ManoramaMax, FanCode, Playfix மற்றும் பிறவற்றிற்கான அக்சஸ் வழங்குகிறது. இது மட்டுமல்லாமல், Vi யின் இந்த திட்டத்தில், கஸ்டமர்கள் 10GB மொபைல் டேட்டாவின் பலனையும் வழங்குகிறது .

Vodafone Idea யின் இந்த திட்டத்தின் விலை என்ன?

Vi யின் இந்த திட்டத்தை நிறுவனம் 175 ரூபாய்க்கு அறிமுகப்படுத்தியுள்ளது இந்த திட்டம் 15க்கும் மேற்பட்ட OTT அக்ஸசுடன் வருகிறது. இந்த காரணத்திற்காக, இது சிறந்த திட்டமாக மாறுகிறது, இது ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களுக்கும் போட்டியை அளிக்கிறது. இந்த திட்டத்தில் உங்களுக்கு 10ஜிபி டேட்டாவின் நன்மையும் வழங்கப்படுகிறது.

இந்த திட்டம் யாருக்கெல்லாம் கிடைக்கும்?

Vi யின் ரூ.175 திட்டத்தை அனைவரும் பயன்படுத்த முடியாது. Vi Hero அன்லிமிடெட் பேக் ரூ 449 மற்றும் ரூ 979 உடன் ரீசார்ஜ் செய்யும் பயனர்கள் மட்டுமே இதைப் பயன்படுத்த முடியும், அதாவது, இந்த திட்டத்திற்கு இரண்டு திட்டங்களில் ஒன்று உங்களுக்குத் தேவைப்படும், அதன் பிறகு ரூ. 175 இந்தத் திட்டத்தை நீங்கள் ரீசார்ஜ் செய்யலாம்.

இந்த இரண்டு பெக்கிலும் உங்களுக்கு அன்லிமிடெட் காலிங் தவிர தினசரி டேட்டா நன்மை உடன் வருகிறது, நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை வரம்பற்ற டேட்டா பயன்பாடும் இதில் அடங்கும்.இது தவிர வார week எண்டு டேட்டா ரோல் ஓவர் மற்றும் பல நன்மைகளைப் பெறலாம்.

புதிய திட்டத்தில் கிடைக்கும் மற்ற நன்மைகள்

புதிய சப்ஸ்க்ரிப்சன் திட்டத்தை பற்றி பேசினால், இந்த புதிய திட்டத்தில் Vi Movies மற்றும் TV Plus ஜோயின் செய்யலாம். இதை தவிர இங்கு Vi Movies மற்றும் TV Lite உடன் கூட்டு சேர்ந்துள்ளது, இது தவிர Vi Movies மற்றும் TV Pro Plans உடன் புதிய திட்டத்தை சேர்த்துள்ளது இங்கே உங்கள் தகவலுக்கு, Vi Movies மற்றும் TV Plus ஆகியவற்றிற்கு நீங்கள் மாதம் ரூ.248 செலுத்த வேண்டும் என்பதை உங்களுக்குச் சொல்கிறோம். இதில் நீங்கள் 17 OTT ஆப்களுக்கான அன்லிமிடெட் அக்சஸ் வழங்குகிறது . சுமார் 350 லைவ் டிவி சேனல்கள் மற்றும் பல அம்சங்களுக்கான அக்சஸ் பெறலாம்.

Vi Movies மற்றும் TV Lite யின் இந்த திட்டத்தில் என்ன என்ன நன்மையுடன் வருகிறது?

நீங்கள் Vi Movies மற்றும் TV Lite திட்டத்தை வாங்க விரும்பினால், மாதத்திற்கு 154 ரூபாய்க்கு அதைப் பெறுவீர்கள். இந்தத் திட்டத்தில் நீங்கள் ஒரு சாதனத்திற்கு 16 OTT நன்மையைப் பெறலாம். இந்த திட்டத்தில் 2ஜிபி டேட்டாவின் நன்மையும் வழங்கப்படுகிறது.இதை தவிர நீங்கள் Vi Movies மற்றும் TV Pro பற்றி பேசினால் இதில் உங்களுக்கு 202ரூபாயின் விலையில் சுமார் 13 OTT Apps யின் நன்மை மற்றும் 5GB வரையிலான அதிகபட்சமான டேட்டா நன்மை வழங்கப்படுகிறது, மொபைல் மற்றும் டிவி உள்ளிட்ட இரண்டு சாதனங்களில் இந்தத் திட்டத்தை இயக்கலாம்.

இதையும் படிங்க:Jio அறிமுகம் செய்தது தீபாவளி தமக்கா ஆபர் அன்லிமிடெட் டேட்டா உடன் OTT நன்மை

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :