டெலிகாம் ஆப்பரேட்டர்கலான Airtel, Jio, மற்றும் Vodafone Idea (Vi) ஏற்கனவே சந்தையில் பல Disney+ Hotstar ப்ரீ பெய்ட் திட்டங்களுடன் கொண்டு வந்துள்ளது, , அதே போல் சமிபத்தில் ரிலையன்ஸ் ஜியோ சமிபத்தில் Disney+ Hotstar bundled திட்டத்தை கொண்டுவந்து அதனை தொடர்ந்து இப்பொழுது Vi குறைந்த விலையில் அதாவது ரூ,200 க்குள் Disney+ Hotstar சப்ஸ்க்ரிப்சன் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. குறைந்த விலையில் Disney+ Hotstar சப்ஸ்க்ரிப்சன் பெற விரும்பினால் இந்த திட்டம் உங்களுக்கு சரியானதாக இருக்கும்.
வோடபோன் ஐடியாவின் இந்த திட்டத்தை பற்றி பேசினால், இந்த திட்டத்தின் விலை ரூ. 151 ஆகும். உண்மையில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைலுக்கு நீங்கள் செலுத்த வேண்டிய விலையை விட ரூ.2 அதிகம். நீங்கள் Vi வாடிக்கையாளராக இருந்தால், Disney+ Hotstar மொபைலுக்கான முழுமையான சப்ச்க்ரிப்சன் வாங்குவதை விட, இந்தத் திட்டத்திற்குச் சந்தா செலுத்துவது உங்களுக்குப் பலனளிக்கும். சரி இந்த திட்டத்தில் கிடைக்கும் நன்மைகள் என்ன வாங்க பாக்கலாம்.
வோடபோன் ஐடியாவின் இந்த திட்டத்தின் விலை ரூ, 151க்கு வருகிறது. இதை தவிர இதில் 8GB டேட்டா வழங்கப்படுகிறது இதன் வேலிடிட்டி 30 நாட்களுக்கு இருக்கிறது, இந்த வேலிடிட்டி என்பது உங்கள் சிம்மிற்கான சேவை வேலிடிட்டியை குறிக்காது அதாவது இந்த திட்டம் ஒரு டேட்டா திட்டம் ஆகும் இதில் எந்த வொயிஸ் காலிங் நன்மை கிடைக்காது இதற்காக தனியாக நீங்கள் மற்றொரு திட்டத்தை ரீச்சார்ஜ் செய்ய வேண்டும். அடிப்படை ப்ரீபெய்டு ரீசார்ஜ் இல்லாமல் அல்லது செயல்படாத சிம்மில் இது வேலை செய்யாது.
இந்த திட்டத்துடன் இணைந்த Disney+ Hotstar மொபைல் சந்தா 90 நாட்கள் அல்லது 3 மாதங்களுக்கு கிடைக்கும். எனவே, நீங்கள் செயலில் உள்ள அடிப்படை ப்ரீபெய்ட் திட்டத்தைக் கொண்ட Vi வாடிக்கையாளராக இருந்தால், Disney+ Hotstar இயங்குதளத்தின் முழுமையான செல்லுபடியை வாங்குவதற்குப் பதிலாக ரூ.151 டேட்டா வவுச்சரைப் பயன்படுத்தி ரீசார்ஜ் செய்ய வேண்டும்.
இந்த திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள Disney+ Hotstar மொபைல் சப்ஸ்க்ரிப்சன் 90 நாட்களுக்கு கிடைக்கும் அதாவது 3 மாதங்களுக்கு கிடைக்கும், நீங்கள் ஏற்கனவே ஒரு பேஸ் திட்டத்தை ரீச்சார்ஜ் செய்து இருந்தால் Vi யின் இந்த திட்ட்டம் பொருத்தமாக இருக்கும், அதாவது , Disney+ Hotstarக்கு தனியாக ரீச்சார்ஜ் திட்டத்தை வாங்குவதற்க்கு பதிலாக இதை டேட்டா வவுச்சர்கவும் பயன்படுத்தலாம், மேலும் உங்களின் போனில் 720p உலக கோப்பை கிரிகெட் மேட்சை பார்த்து மகிழலாம்.
இதையும் படிங்க:Jio யின் இந்த திட்டத்தில் தினமும் 3GBடேட்டா,84 நாட்கள் வேலிடிட்டி