Vi Max திட்டத்தில் கிடைக்கும் Unlimited Data உடன் பல நன்மை

Vi Max திட்டத்தில் கிடைக்கும் Unlimited Data உடன் பல நன்மை
HIGHLIGHTS

Vodafone Idea (Vi) அதன் Max Family போஸ்ட்பெயிட் சில புதிய அம்சங்களுடன் கொண்டுவந்துள்ளது,

இந்தத் திட்டத்தின் பயனர்கள் இரவில் டேட்டா ஷேரிங் மற்றும் அன்லிமிடெட்டேட்டாவைப் பயன்படுத்த முடியும்.

இந்த புதிய அம்சத்தின் படி பயனர்கள் 10 ஜிபி முதல் 25 ஜிபி வரையிலான கூடுதல் டேட்டா

டெலிகாம் நிறுவனமான Vodafone Idea (Vi) அதன் Max Family போஸ்ட்பெயிட் சில புதிய அம்சங்களுடன் கொண்டுவந்துள்ளது, இந்தத் திட்டத்தின் பயனர்கள் இரவில் டேட்டா ஷேரிங் மற்றும் அன்லிமிடெட்டேட்டாவைப் பயன்படுத்த முடியும். கடந்த ஆண்டு நவம்பரில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டத்தில், பயனர்கள் ரூ.601 முதல் ரூ.1,151 வரையிலான விலைகளை செலுத்த வேண்டும். ஒரு ‘குடும்பத்தில்’ உள்ள மற்ற நான்கு மெம்பர்களுக்கு பயனர்கள் தங்கள் திட்டங்களை இணைக்க அனுமதிக்கும் பெரிய டேட்டா பேக்குகளை இது வழங்குகிறது.

Vi Data Sharing மற்றும் night time அன்லிமிடெட் டேட்டா

இந்த புதிய அம்சத்தின் படி பயனர்கள் 10 ஜிபி முதல் 25 ஜிபி வரையிலான கூடுதல் டேட்டாவுடன் திட்டத்தை டாப் அப் செய்யும் வசதியைப் வழங்குகிறது, இது குடும்பத்தின் முதன்மை மற்றும் இரண்டாம் நிலை உறுப்பினர்களுக்கும் கூடுதல் டேட்டா ஒதுக்கீட்டைப் பகிர்ந்து கொள்ள வாய்ப்பளிக்கும் என்று Vi கூறினார்.

vodafone idea
#Vodafone idea

Max Family போஸ்ட்பெய்ட் திட்டத்திற்கு Vi யின் நைட் நேர அன்லிமிடெட் டேட்டா பலன் கிடைப்பதால் பயனர்கள் நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை அன்லிமிடெட் டேட்டாவைப் பயன்படுத்தி உயர் ரேசளுசன் கொண்ட கண்டேண்டை ஸ்ட்ரீம் செய்து டவுன்லோட் செய்ய அனுமதிக்கும். நடப்பு நிதியாண்டில் நாட்டில் போஸ்ட்பெய்டு பயன்படுத்துவோர் எண்ணிக்கை 12 சதவீதம் அதிகரிக்கும் என ரேட்டிங் ஏஜென்சி கிரிசில் சில மாதங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தது.

Voda

இந்த திட்டமானது அதன் போஸ்ட்பெய்ட் பயனர்களை அதிகரிப்பதற்காக VI கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் தனிப்பட்ட எண்களைக் கொண்டவர்களுக்கும் தனது சேவைகளை கவர்ச்சிகரமானதாக மாற்ற தயாராகியுள்ளது, இந்த பயனர்கள் கூடுதல் பலன்களுக்கு அதிக விலை கொடுக்கலாம்.

ஸ்பெக்ட்ரம் ஏலத்திற்காக டெலிகாம் துறைக்கு VI நிறுவனம் சுமார் ரூ.1,680 கோடி செலுத்த வேண்டியுள்ளது. சமீபத்தில் நிறுவனம் இதற்காக 30 நாட்கள் நீட்டிப்பு கேட்டிருந்தது. Vi முன்பு Max போஸ்ட்பெய்ட் பயனர்களுக்கு சாய்ஸ் அம்சத்தை அறிமுகப்படுத்தியது.

இதில், பயனர்கள் தங்கள் தேவைக்கேற்ப பலன்களை தேர்வு செய்து கொள்ளலாம். இது தவிர, அதன் பயனர்களை மோசடி கால்களில் இருந்து பாதுகாக்க Truecaller உடன் இணைவது குறித்தும் Vi தெரிவித்திருந்தது.

சில மாதங்களுக்கு முன்பு, டெலிகாம் நிறுவனங்கள், 50-100 mbps ரேஞ்சில் அதிவேக டேட்டா சேவைகளை வழங்க, மொபைல் டெலிகாம் பிரிவுக்கு 6 GHz பிரிகுவன்ஷி ரேஞ்சில் உள்ள ஸ்பெக்ட்ரம் ஒதுக்குமாறு மத்திய அரசிடம் கேட்டிருந்தன. நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களை 5ஜி சேவைகள் சென்றடைந்துள்ளன. உலகில் வேகமாக வளர்ந்து வரும் நெட்வொர்க்குகளில் இதுவும் ஒன்று என்று மத்திய அரசு கூறுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo