Vi வெறும் 17 ரூபாயில் கிடைக்கும் அன்லிமிடெட் டேட்டா நன்மை ஒரே நேரத்தில் 2 பிளான் அறிமுகம்.

Updated on 06-Jun-2023
HIGHLIGHTS

Vodafone-Idea அதாவது Vi ஒரே நேரத்தில் இரண்டு புதிய டேட்டா ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது

இந்தத் டேட்டா திட்டங்கள் நைட் டேட்டா வவுச்சர்களாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன

இரண்டு டேட்டா வவுச்சர்களையும் ஆட்-ஆன் திட்டங்களாகப் பயன்படுத்தலாம்.

Vodafone-Idea அதாவது Vi ஒரே நேரத்தில் இரண்டு புதிய டேட்டா ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் டேட்டா திட்டங்கள் நைட் டேட்டா வவுச்சர்களாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. திட்டத்தின் ஆரம்ப விலை ரூ. 17 மற்றும் ரூ.57 அதிக வேலிடிட்டியாகும் திட்டம்  ஆகும். நிறுவனம் அன்லிமிடெட் டேட்டாவுடன் வரும் இரண்டு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இரண்டு டேட்டா வவுச்சர்களையும் ஆட்-ஆன் திட்டங்களாகப் பயன்படுத்தலாம்.

டேட்டா வவுச்சரின் நன்மை.

நிறுவனம் ரூ.17 மற்றும் ரூ.57 விலையில் இரண்டு புதிய நைட் டேட்டா வவுச்சர்களை "நைட் பிங்கே" அறிமுகப்படுத்தியுள்ளது. Night Binge Vi பயனர்களை நள்ளிரவு முதல் காலை 6:00 மணி வரை எந்த லிமிட்டும் இல்லாமல் நைட் முழுவதும் பயன்படுத்த அனுமதிக்கிறது. அதாவது நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை பயனர்கள் அன்லிமிடெட் டேட்டாவைப் பயன்படுத்தலாம்.

இந்த இரு திட்டத்தின் வேலிடிட்டி என்ன?

இது ப்ரீபெய்டு பயனர்களுக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.ரூ.17 திட்டத்தில், பயனர்கள் நள்ளிரவு முதல் காலை 6:00 மணி வரை ஒரு நாளைக்கு அன்லிமிடெட் டேட்டா பயன்பாட்டைப் பெறுவார்கள், அதேசமயம், ரூ.57 திட்டத்தில், பயனர்கள் 7 நாட்களுக்கு அன்லிமிடெட்  நைட் டேட்டாவைப் பெறலாம்..

இதில் கிடைக்கும் நன்மை என்ன ?

கல்லூரி/விடுதி மாணவர்கள் மற்றும் பிராட்பேண்ட் சேவைகளை அணுகாத ஆரம்பநிலை மாணவர்களுக்காக இந்த பேக்குகள் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால் திரைப்படம் பார்ப்பது, வீடியோக்களை ஸ்ட்ரீமிங் செய்வது, இசை கேட்பது, கேம்கள் விளையாடுவது, சர்ஃபிங் செய்வது, சேட் செய்வது மற்றும் இரவில் வேலை செய்வது அல்லது படிப்பது போன்றவற்றுக்கு அதிவேக டேட்டா தேவைப்படுகிறது. Vi வாடிக்கையாளர்கள் Vi கேம்களை விளையாட, Vi Movies & TV இல் சமீபத்திய திரைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ரசிக்கவும் அல்லது Vi பயன்பாட்டில் Vi Music யில் தங்களுக்குப் பிடித்த பாடல்களைக் கேட்கவும் இந்த பேக்குகளைப் பயன்படுத்தலாம்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :