ஏர்டெல் சமீபத்தில் தனது குறைந்த விலை திட்டத்தை நிறுத்திவிட்டது. குறைந்த விலை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டாலும். ஏர்டெல்லின் குறைந்த விலை ரீசார்ஜ் திட்டத்துடன் பயனர்களை இணைக்க Vi முயற்சி செய்து இருக்கலாம். இதன் காரணமாகவே 99 ரூபாய்க்கு மலிவான ரீசார்ஜ் திட்டத்தை Vi அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஒரு என்ட்ரி லெவல் ப்ரீ-பெய்டு ரீசார்ஜ் திட்டமாகும்.
Vi இன் ரூ.99 ப்ரீ-பெய்டு ரீசார்ஜ் திட்டத்தில் 200MP டேட்டா வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் ரூ.99 டாக் டைம் வழங்கப்படுகிறது. அதே 99 ரூபாய் செலவழித்த பிறகு, பயனர்களுக்கு வினாடிக்கு 2.5 பைசா வீதம் வசூலிக்கப்படும். இந்த திட்டத்தில் பயனர்கள் எந்த இலவச மெசேஜிங் வசதியையும் பெற மாட்டார்கள். Vi இன் ரூ.99 ரீசார்ஜ் திட்டத்தை Vi இணையதளம் மற்றும் ஆப் மூலம் ரீசார்ஜ் செய்யலாம்.
சமீபத்தில் Vodafone-Idea (VI) 249 ரூபாய்க்கு ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. வரம்பற்ற டேட்டா வசதியுடன் வருகிறது. மேலும், இந்த திட்டத்தில் தினமும் 1.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 21 நாட்கள். இது தவிர, தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. தினசரி டேட்டா வரம்பு முடிந்ததும், இணைய வேகம் 64Kbps ஆக குறைக்கப்படும்.
வோடபோன்-ஐடியா நீண்ட காலமாக வணிக நஷ்டத்தை சந்தித்து வருகிறது. என்றாலும் வணிக நஷ்டத்தில் இருந்து விரைவில் மீள்வதாக நிறுவனம் கூறிவருகிறது. நஷ்டம் காரணமாக, நிறுவனம் இந்தியாவில் 5G வெளியீட்டை தொடங்கவில்லை. மேலும், 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் பங்கேற்பது மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.