BSNL . நிறுவன வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனம் ஸ்டிரீமிங் சேவைகளுக்கான சந்தாவை பிராட்பேண்ட் சலுகைகளுடன் வழங்கி வருகிறது. முன்னதாக BSNL பாரத் ஃபைபர் வாடிககையாளர்களுக்கு ரூ. 999 மதிப்புள்ள அமேசான் பிரைம் சந்தா வழங்கப்பட்டது.
இந்த சலுகையில் பயனர்களுக்கு ஹாட்ஸ்டார் பிரீமியம் சந்தா வழங்கப்படுகிறது. இதில் பயனர்கள் ஹாட்ஸ்டார் ஒரிஜினல்ஸ், லைவ் ஸ்போர்ட்ஸ், திரைப்படங்கள் மற்றும் டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றை பார்த்து ரசிக்க முடியும்.இம்முறை சூப்பர்ஸ்டார் 300 என்ற பெயரில் புதிய சலுகை BSNL பிராட்பேண்ட் சேவையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
BSNL நிறுவனத்தின் புதிய சூப்பர்ஸ்டார் 300 சலுகையின் கட்டணம் ரூ. 749 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் பயனர்களுக்கு 300 ஜி.பி. அதிவேக டேட்டா 50Mbps வேகத்தில் ஒரு மாதத்திற்கு வழங்கப்படுகிறது. பி.எஸ்.என்.எல். புதிய ஃபைபர் டு ஹோம் சலுகையுடன் ஹாட்ஸ்டார் பிரீமியம் சந்தா வழங்கப்படுவதால், பயனர்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளை நேரலையில் பார்த்து ரசிக்க முடியும்.
முன்னதாக இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் BSNL . நிறுவனம் செலக்ட் செய்த பாரத் ஃபைபர் வாடிக்கையாளர்களுக்கு அமேசான் பிரைம் சந்தாவினை ஒரு வருடத்திற்கு இலவசமாக வழங்கியது. BSNL மட்டுமின்றி ஏர்டெல் நிறுவனமும் பயனர்களுக்கு ஸ்டிரீமிங் சேவைக்கான சந்தாவை தனது சலுகைகளுடன் வழங்கி வருகிறது.
BSNL அறிவித்திருக்கும் சூப்பர்ஸ்டார் 300 பிராட்பேண்ட் சலுகை இந்தியா முழுக்க அனைத்து வட்டாரங்களிலும் வழங்கப்படுகிறது. புதிய சலுகையை ஆக்டிவேட் செய்ய பயனர்கள் ஆன்லைன் மூலமாகவோ அல்லது 18003451500 என்ற எண்ணிற்கு கால் செய்யலாம்.