Trai யின் இந்த புதிய விதிமுறையால் இனி நிங்கள் அதிக பணம் செலுத்த தேவை இல்லை.

Trai  யின் இந்த புதிய விதிமுறையால்  இனி நிங்கள் அதிக பணம் செலுத்த தேவை இல்லை.
HIGHLIGHTS

Telecom Regulatory Authority of India ( Trai ) Rules கேபிள் டிவி மற்றும் DTH பணம் குறைக்கப்பட்டுள்ளதாக தகவல் தற்பொழுது வெளியாகியுள்ளது

Telecom Regulatory Authority of India ( Trai ) Rules கேபிள்  டிவி  மற்றும் DTH பணம் குறைக்கப்பட்டுள்ளதாக தகவல் தற்பொழுது வெளியாகியுள்ளது. அதாவது  தொடர்ந்து பல பயனர்கள் சோசியல் மீடியா வெப்சைட்களில் கட்டண உயர்வு மற்றும் சேனல் தேர்ந்தெடுக்கும்போது  முன்பை விட கூடுதலாக பணம் செலுத்த வேண்டியதாக இருக்கிறது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

உங்கள் வீடுகளில் புதிய சேவையை கொடுப்பதற்கும், ட்ராய் நிறுவனம் கட்டணங்களை வடிவமைத்திருக்கிறது. அந்த வகையில், இணைப்பினை ரிப்பேர் செய்வதற்கு ரூ. 200 வசூலிக்கப்படும். அதை தவிர ஸ்மார்ட் கார்டு மாற்ற 300 ரூபாயும், இன்ஸ்டலேஷன் மற்றும் ஆக்டிவேஷனுக்கு 500 ரூபாயும் கட்டணங்களாக வசுலிக்கப்படும். என கோரப்பட்டுள்ளது.

முன்னதாக இன்ஸ்டலேஷன் மற்றும் ஆக்டிவேஷனுக்கு 1200 ரூபாயை வசூலித்து வந்தனர். அதனை தற்போது குறைத்து இரண்டாக பிரித்திருக்கின்றனர். இன்ஸ்டலேஷனுக்கு 350 ரூபாயும், ஆக்டிவேஷனுக்கு 150 ரூபாயும் நிர்ணயிருத்துள்ளனர். இதுவே 500 ரூபாயாக பெறப்படுகிறது. இதற்கு மேல் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் கட்டணமாக கேட்டல் நிச்சயம் தர வேண்டாம் என்று குறிப்பாக தெரிவித்திருக்கிறது ட்ராய்.

இதனுடன் உங்களது குறையை பற்றி தெரிந்து  கொள்ள ட்ரை கால்  சென்டர்  ஒன்று ஆரம்பித்துள்ளது  அதன் மூலம்  உங்களின் புகார்களை  தெரியப்படுத்தலாம் நீங்கள்  புகார்  செலுத்திய 72 மணி நேரத்திற்குள், உங்கள் குறையை  நிவர்த்தி செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது 

அப்படி ஒரு வேளை நீங்கள் புகார் அளித்து 72 மணி நேரமாகியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றால், வாடிக்கையாளர்கள் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை. கேபிள் டிவி ஆப்பரேட்டரை மாற்றம் செய்யும்போது பல இன்னல்களை வாடிக்கையாளர்கள் சந்திக்க நேரிடும். அதற்காகத்தான் இத்தகைய விதிமுறையை அமல்படுத்தியுள்ளது

மேலும் சோசியல்  மீடியாக்களில்  தெரிவிக்கப்பட்ட புகார்களையும் விரைவில்  சரி செய்யப்படும்  என கூறப்பட்டுள்ளது. 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo