செல்போன்களுக்கு வரும் கால்களின் ரிங் டோன் நேரத்துக்கு இந்தியாவில் இது வரை வரையறை இல்லாமல் இருந்தது. ஒவ்வொரு செல்போன் நிறுவனங்களும் 30 வினாடிகள் முதல் 45 வினாடிகள் வரை காலிங் ரிங் நேரத்தை வழங்கி வந்தன.
இதைத் தொடர்ந்து அழைப்பு ஒலி நேரம் தொடர்பாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை நிறுவனமான டிராய் புதிய நடைமுறையை தெரிவித்துள்ளது.இந்த நிலையில் காலிங் ஒலி நேரத்தை முறைகேடாக பயன்படுத்தி ஆதாயம் அடைவதாக செல்போன் நிறுவனங்களுக்குள் சர்ச்சை நிலவி வந்தது.
அதன் படி செல்போனில் அழைப்பு ஒலி நேரம் 30 வினாடியாகவும், லேண்ட்லைன் போனில் அழைப்பு ஒலி நேரம் 60 வினாடியாகவும் இருக்க வேண்டும் என்று டிராய் உத்தரவிட்டுள்ளது. இது இன்னும் 15 நாட்களில் அமலுக்கு வர உள்ளது.
முன்னதாக அழைப்பு ஒலி நேரத்தை 20 முதல் 5 வினாடியாக நிர்ணயிக்க வேண்டும் என்று ஜியோ நிறுவனம் வலியுறுத்தி இருந்தது. ஆனால் ஏர்டெல், வோடாபோன் நிறுவனங்கள் 30 வினாடியில் இருந்து 70 வினாடிக்குள் நிர்ணயிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தன. அதன் அடிப்படையில் காலிங் சவுண்ட் நேரத்தை 30 வினாடியாக டிராய் நிர்ணயித்து புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது.