TRAI அறிவித்துள்ள டாப் நிறுவனங்கள், இது மாதத்தின் கணக்கு..!
புதிதாக வாடிக்கையாளர்களை சேர்த்திருப்பதாக மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையமான டிராய் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய டெலிகாம் சந்தையில் பிப்ரவரி 2019 மாதத்தில் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் BSNL நிறுவனங்கள் மட்டுமே புதிதாக வாடிக்கையாளர்களை சேர்த்திருப்பதாக மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையமான டிராய் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 2019 வரையிலான காலக்கட்டத்தில் ஜியோ பயன்படுத்துவோர் எண்ணிக்கை 29.72 கோடியாக இருந்தது. இது ஜனவரியில் இருந்ததை விட 77.93 லட்சம் அதிகம் ஆகும். பி.எஸ்.என்.எல். நிறுவனம் இதே காலக்கட்டத்தில் 8.99 லட்சம் வாடிக்கையாளர்களை புதிதாக சேர்த்திருக்கிறது. அந்த வகையில் பி.எஸ்.என்.எல். பயன்படுத்துவோர் எண்ணிக்கை 11.62 கோடியாக இருக்கிறது.
இதேபோன்று பாரதி ஏர்டெல் நிறுவனமும் 49,896 வாடிக்கையாளர்களை இழந்து, பிப்ரவரி வரையிலான காலக்கட்டத்தில் 34.03 கோடி வாடிக்கையாளர்களை கொண்டிருக்கிறது.
சமீபத்தில் ஜியோ பயன்படுத்துவோர் எண்ணிக்கை 30 கோடியை கடந்தது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் மொத்த வயர்லெஸ் சந்தாதாரர் எண்ணிக்கை 118.36 கோடியாக இருக்கிறது. பிப்ரவரி வரையிலான காலக்கட்டத்தில் வோடபோன் ஐடியா நிறுவனம் 57.87 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. அந்த வகையில் வோடபோன் ஐடியா பயனர் எண்ணிக்கை தற்சமயம் 40.93 கோடியாகும்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile