இந்நிலையில் தமிழகத்தில் நேற்று முதல் ஏர்செல் சேவை முடங்கியது. முன் அறிவிப்பின்றி நடந்த இந்த சம்பவத்தால் ஏர்செல் வாடிக்கையாளர்கள் பலர் அவதிக்குள்ளாகினர். சில இடங்களில் ஏர்செல் சேவை மையம் முன் தகராறுகளுக்கும் ஏற்பட்டது.
அதன் பின்னர், ஏதிர்பாராத தொழில்நுட்ப கோளாறு காரணமாக சேவையில் துண்டிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் விரைவில் சரி செய்யப்படும் என்று ஏர்செல் நிறுவனம் தெரிவித்தது. ஆனால், தற்போது இந்த கோளாறு சரியாக நான்கு நாட்கள் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஏர்செல் எண் போர்ட் செய்வது குறித்தும் தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்திலும் விரைவில் நிரந்தரமாக ஏர்செல் சேவை துண்டிக்கப்பட உள்ளதால் வாடிக்கையாளர்கள் விரைவில் தங்கள் எண்களை வேறு நெட்வொர்க்கிற்கு மாற்றிக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
வேறு நெட்வொர்க் மாற, ஏர்செல் பயனர்களுக்கு MNP CODE வழங்கப்பட்டு வருகிறது. இந்த எண்ணை பெறுவதற்கு, PORT என டைப் செய்து, உங்கள் மொபைல் எண்ணையும் டைப் செய்து 1900 என்ற எண்ணிறக்கு அனுப்ப வேண்டும்.
மேலும், வாடிக்கையாளர்கள் விரைவில் தங்கள் எண்களை வேறு நெட்வொர்க்கிற்கு மாற்றிக்கொள்ளுமாறு அறிவுரை வழங்கியுள்ளது. அதன் பின்னர் கிடைக்கபெரும் எண்ணுடன் ஆதார் எண்னையும் காட்டி மொபைல் கடைகளில் மற்ற நெட்வொர்க் நிறுவனத்திற்கு மாற்றிக்கொள்ளலாம். இதற்கு கட்டணம் வசூலிக்கப்படாது என தெரிவித்துள்ளது.
ஆனால், இதற்கு முன்னர் வாட்ஸ் ஆப்பில் ஏர்செல் சேவைகள் தமிழகத்தில் வரும் 28 ஆம் தேதியோடு முடக்கப்படுவதாக செய்திகள் வெளியாகியது. மேலும், அதன் பின்னர் ஏர்செல் வாடிக்கையாளர்கள் தங்களது எண்ணை மற்ற நெட்வொர்க் நிறுவனத்திற்கு போர்ட் செய்ய முடியாது எனவும் கூறப்பட்டது. இந்நிலையில், இதனை தெளிவுபடுத்தும் விதமாக இந்த தகவல் வெளியாகியுள்ளது.