டாடா ஸ்கை டிடிஎச் நிறுவனம், தங்கள் வாடிக்கையாளர்களுக்கு DTH அக்கவுண்ட் குறித்த விபரங்கள், பேலன்ஸ் , வேலிடிட்டி உள்ளிட்ட விபரங்களை வாட்ஸ்அப் மூலமாகவே வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஜியோ பைபர் டிவி சேவையை அறிமுகப்படுத்த உள்ளதாக ஜியோ நிறுவனம் அறிவித்தாலும் அறிவித்தது, மற்ற டிடிஎச் நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு விலையை குறைப்பதும், அதிரடி சலுகைகளை அறிவிப்பதுமாக உள்ளன. புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கும் பொருட்டு புதுப்புது சலுகைகளை டிடிஎச் நிறுவனங்கள் அறிவித்த வண்ணம் உள்ளன. ஆனால், டாடா ஸ்கை நிறுவனமோ, எந்தவித புதிய அறிவிப்புகளையும் வெளியிடாமல், தங்கள் வாடிக்கையாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் அடிப்படையில் வசதிகள் மற்றும் சேவைகளை வழங்கி வருகிறது. டாடா ஸ்கை நிறுவனம், தங்களது வாடிக்கையாளர்கள் வாட்ஸ்அப் செயலியின் மூலமாகவே, அக்கவுண்ட் விபரங்கள் உள்ளிட்ட தகவல்களை பெற வழிவகை செய்துள்ளது.
டாடா ஸ்கை வாடிக்கையாளர்கள், வாட்ஸ்அப் மூலம் தகவல்களை பெற, டாடா ஸ்கை DTH உடன் இணைத்துள்ள மொபைல் எண் மூலம், வாட்ஸ்அப் பிசினஸ் செயலியை இன்ஸ்டால் செய்து கொள்ள வேண்டும். வாட்ஸ்அப் பிசினஸ் செயலியை ஏற்கனவே பயன்படுத்துபவர்கள் என்றால், உங்கள் மொபைல்போனில் டாடா ஸ்கை டோல்ப்ரீ எண் +91 1800 208 6633 என்ற நம்பரை சேமித்துக்கொள்ளுங்கள்.
இந்த வாட்ஸ்அப் பிஸ்னஸ் ஆப்யின் மூலம், டாடா ஸ்கை வாடிக்கையாளர்கள், விரும்பும் சேனல்களை சேர்த்துக்கொள்ளலாம், வேண்டாத சேனல்களை நீக்கலாம், பேலன்ஸ் ( நிலுவைத்தொகை) சரிபார்த்துக்கொள்ளலாம், பயன்பாட்டில் உள்ள சேனல்களின் விபரங்களை தெரிந்துகொள்ளலாம், கொடுக்கப்பட்டுள்ள இணையதள லிங்கின் மூலம், உடனடியாக ரீசார்ஜ் செய்துகொள்ளலாம், எமர்ஜென்சி டாப் அப் உள்ளிட்ட சேவைகள் மற்றும் விபரங்களை வாட்ஸ்அப்பின் மூலம் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப் மூலம் தகவல்பெறும் வசதி குறித்து அதிக தகவல்களுக்கு டாடா ஸ்கை வாடிக்கையாளர்கள், 92296-92296 என்ற எண்ணிற்கு மிஸ்டுகால் கொடுத்து அதற்குரிய அப்டேட்களை பெறலாம். டாடா ஸ்கையுடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் நம்பரிலிருந்து வாட்ஸ்அப் என்று டைப் செய்து 56633 என்ற நம்பருக்கு மெசேஜ் அனுப்பியும் இந்த சேவையை பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.