Sim கார்ட்களுக்கு புதிய விதிமுறை , இனி இதை மீறினால் 10 லட்சம் ஆபராதம்.

Sim கார்ட்களுக்கு  புதிய  விதிமுறை , இனி  இதை  மீறினால் 10 லட்சம் ஆபராதம்.
HIGHLIGHTS

மொபைல் சிம் கார்டு விதிகளை டிராய் மாற்றியுள்ளது.

புதிய விதிமுறைகள் அக்டோபர் 10ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது

செப்டம்பர் 30ஆம் தேதிக்குப் பிறகு பதிவு செய்யாமல் சிம் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் ரூ.10 லட்சம் அபராதம்

பெரும்பாலான மோசடிகள் போலி மொபைல் சிம் கார்டுகளால் நடக்கின்றன. இத்தகைய சூழ்நிலையில், மொபைல் சிம் கார்டு விதிகளை டிராய் மாற்றியுள்ளது. ஒரு அறிக்கையின்படி, போலி சிம் கார்டு கனெக்சன் விற்பனையான இடத்தில் இருந்து செயல்படுத்தப்பட்டன. இதுபோன்ற சூழ்நிலையில், சிம் கார்டுகளை விற்கும் மொத்த வியாபாரிகளின் மோசடியை தடுக்கும் வகையில் டிராய் விதிகளை கடுமையாக்கியுள்ளது. சிம் கார்டுகளுக்கான புதிய விதிமுறைகள் அக்டோபர் 10ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. செப்டம்பர் 30ஆம் தேதிக்குப் பிறகு பதிவு செய்யாமல் சிம் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் அவருக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.

sim card

யாரும் போலியான  சிம்மை  விற்க  முடியாது.

இனி  யாரும் எளிதாக  சிம் கார்டை  விற்றுவிட  முடியாது, இதற்கு முறையான உரிமம் பெற வேண்டும். இந்த லைசன்ஸ்  வழங்கும் செயல்முறை மிகவும் கடுமையானதாக இருக்கும். ஆதார் மற்றும் பாஸ்போர்ட் போன்ற வெரிபிகேசன் இருக்கும். மேலும், போலீஸ் வெரிபிகேசன் செய்யப்படும். உங்கள் பெயரில் ஏதேனும் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தால். அல்லது நீங்கள் ஏதேனும் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டால், சிம் கார்டுகளை விற்க உங்களுக்கு உரிமம் வழங்கப்படாது. மேலும், உரிமையை யாருக்கு கொடுக்கிறீர்கள்? உங்கள் ஏஜென்ட் மற்றும் டிஸ்ட்றிபுயுட்டார் போலீஸ் வெரிபிகேசன் இருக்கும்.

sim cards

இதற்க்கு பல ஆவணங்கள் தேவைப்படும்.

டெலிகாம் ஆப்பரேட் பாயின்ட் ஆஃப் சேல் பதிவு மற்றும் வெரிபிகேசன் செய்யப்பட வேண்டும். சரிபார்க்க, சிம் விற்பனையாளர் கார்ப்பரேட் அடையாள நம்பர் மற்றும் பிஸ்னஸ் லைசன்ஸ் போன்ற சில ஆவணங்களை ஆதார் மற்றும் பாஸ்போர்ட் விவரங்களுடன் வழங்க வேண்டும். இது தவிர, வொர்கிங் முகவரி மற்றும் லோக்கல் வசிப்பிடம் பற்றிய தகவல்கள் கொடுக்கப்பட வேண்டும். இது தவிர, சிம் விற்பனையாளர் ஆதார் அடிப்படையிலான இ-கேஒய்சி போன்ற பயோமெட்ரிக் விவரங்களை வழங்க வேண்டும்.

இதில் சில  எக்ரிமென்ட் செய்யப்படும்.

இதன் பிறகு டெலிகாம் ஆபரேட்டர் மற்றும்  POS ஒரு எழுத்துபூர்வமாக  ஒப்பந்தத்தில்  கையெழுத்திடும்,, இதில்  கஸ்டமர் என்ரோல்மென்ட், ஏரியா ஆஃப் ஆப்பரேசன் மற்றும் விதிகளை மீறினால் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்த தகவல் பதிவு செய்யப்படும்.

Sim fraud

யூனிக் அடையாள அட்டை வழங்கப்படும்

ஒரு தனிப்பட்ட PoS ஐடி TRAI ஆல் வழங்கப்படும். வெளிடிடிட்டியாகும் PoS ஐடி உள்ள விற்பனையாளர்கள் மட்டுமே வாடிக்கையாளர்களைப் பதிவு செய்ய முடியும். சிம் கார்டு விற்பனையாளர்கள் விதிகளை மீறுவது கண்டறியப்பட்டால், அவர்களின் ஐடி நிறுத்தப்படும் அவை 24 மணி நேரத்தில் ப்ளாக்  செய்யப்படும் 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo