உலகின் முதல் முறையாக 5ஜி நெட்வொர்க் பெரும் நகரம்

உலகின் முதல் முறையாக 5ஜி  நெட்வொர்க்  பெரும் நகரம்
HIGHLIGHTS

5ஜி நெட்வொர்க் மற்றும் பிராட்பேண்ட் ஜிகாபிட் சேவையை பெறும் உலகின் முதல் மாவட்டமாக ஷாங்காய் இருப்பதாக தெரிவித்துள்ளது.

5ஜி நெட்வொர்க் மற்றும் பிராட்பேண்ட் ஜிகாபிட் சேவையை பெறும் உலகின் முதல் மாவட்டமாக ஷாங்காய் இருப்பதாக தெரிவித்துள்ளது.

5ஜி நெட்வொர்க் மற்றும் பிராட்பேண்ட் ஜிகாபிட் சேவையை பெறும் உலகின் முதல் மாவட்டமாக ஷாங்காய் இருப்பதாக தெரிவித்துள்ளது. 

அந்த வகையில் 5ஜி தொழில்நுட்பம் அடுத்த தலைமுறை செல்லுலார் தொழில்நுட்பமாக இருக்கிறது. தற்போதைய 4ஜி எல்.டி.இ. நெட்வொர்க்களை விட 5ஜி சேவையை பயன்படுத்தும் போது டவுன்லோடு வேகம் 10 முதல் 100 மடங்குவரை அதிகமாக இருக்கும். அந்த வகையில் ஷாங்காய் மாவட்டத்தில் 5ஜி சிக்னல் பரப்பளவு மற்றும் பிராட்பேண்ட் ஜிகாபிட் நெட்வொர்க் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

உலக நாடுகளிடையே அடுத்த தலைமுறை செல்லுலார் மற்றும் மொபைல் நெட்வொர்க் சேவையை உருவாக்குவதில் கடும் போட்டி ஏற்பட்டிருக்கிறது.

சீராக இயங்க துவங்கும் போது பயனர்கள் தங்களது சிம் கார்டுகளை அப்டேட் செய்யாமல் புதிய நெட்வொர்க் சேவையை பயன்படுத்தலாம் என கூறப்படுகிறது. ஹூவாய் நிறுவனம் 5ஜி சேவையை வழங்குவதற்கு அமெரிக்கா மற்றும் பல்வேறு நாடுகளில் எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது. 

5ஜி சேவை மையங்கள் சீனாவின் பல்வேறு பகுதிகளில் இன்ஸ்டால் செய்யப்பட்டு வருகின்றன. ஹூவாய் நிறுவனத்தின் 5ஜி சேவைகளை பயன்படுத்த வேண்டாம் என பல்வேறு நாடுகளுக்கு அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. எனினும், ஹூவாய் சீன அரசாங்கத்துடன் தங்களுக்கு எவ்வித தொடர்பும் இல்லையென ஹூவாய் தெரிவித்துள்ளது.

சைனா மொபைல் சார்ந்து 5ஜி நெட்வொர்க் சோதனை ஷாங்காயின் ஹாங்கௌவில் துவங்கப்பட்டுள்ளது. இதே பகுதியில் கடந்த மூன்று மாதங்களாக 5ஜி பேஸ் ஸ்டேஷன்களை உருவாக்கும் பணிகள் நடைபெற்றதாக கூறப்படுகிறது. சேவையை துவங்கி வைத்த ஷாங்காய் மாவட்ட துணை மேயர் வு கிங் 5ஜி சேவையில் முதல் வீடியோ கால் மேற்கொண்டார். இதற்கு அவர் ஹூவாய் மேட் எக்ஸ் ஸ்மார்ட்போனினை பயன்படுத்தினார்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo