இந்திய டெலிகாம் துறை சார்பில் ஐந்தாம் தலைமுறை அல்லது 5G தொழில்நுட்பங்களுக்கான ரோட்மேப் இந்த ஆண்டின் ஜூன் மாத இறுதியில் அறிமுகம் செய்யப்படும் என டெலிகாம் துறை செயலாளர் அருணா சுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.
"5G தொழில்நுட்பங்களுக்கான புதிய டெலிகாம் செயல்திட்டம் (NTP 2018) குறித்து வரவேற்க்கக்கூடிய தகவல்களை மத்திய டெலிகாம் துறை பெற்றிருக்கிறது. புதிய டெலிகாம் செயல்திட்டத்திற்கான வரைவு இறுதி கட்டத்தை அடைந்திருப்பதோடு விரைவில் பொது மக்கள் பார்வைக்கும் வரும்," என அவர் தெரிவித்துள்ளார்.
இந்திய டெலிகாம் நிறுவனங்கள் 4G தொழில்நுட்பத்தை விரிவுப்படுத்துவதோடு 5G டெக்நோலோஜிக்கு ஏற்கனவே தயாராகி வருகின்றன என சுந்தர்ராஜன் தெரிவித்தார்.
அடுத்த நிதியாண்டின் இறுதிக்குள் சில பகுதிகள் தவிர இந்தியா முழுக்க 4G நெட்வொர்க் பரவலாகி இருக்கும். தற்போதைய செயல்திட்டம் கணெக்டெட் சாதனங்களுக்கான (Connected Devices) சூழலை மேம்படுத்தும் வகையில் உள்ளது," என தெரிவித்திருக்கிறார்.
கால் டிராப் விவகாரத்தில், டெலிகாம் நிறுவனங்கள் அவசியம் பின்பற்ற வேண்டிய கடுமையான விதிமுறைகளை மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையம் பிறப்பித்து இருக்கிறது என சுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.
விமானங்களில் கணெக்டிவிட்டி வழங்குவது குறித்த கேள்விக்கு, "விமானங்களில் கணெக்டிவிட்டி வழங்குவதற்கான அனுமதியை வாங்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது, எனினும் இது நிறைவுறும் உறுதியான நேரம் குறித்து எவ்வித தகவலும் இல்லை." என அவர் தெரிவித்தார்.