ரிலையன்ஸ் ஜியோ ஜிகாஃபைபர் பிராட்பேண்ட் அசத்தலான சலுகையுடன் விரைவில்.

ரிலையன்ஸ் ஜியோ ஜிகாஃபைபர் பிராட்பேண்ட்  அசத்தலான சலுகையுடன் விரைவில்.
HIGHLIGHTS

ஜியோஜிகாஃபைபர் சேவையில் வாடிக்கையாளர்களுக்கு டேட்டா வேகம் அதிகபட்சம் 1Gbps இல் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 2018 ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் ஜியோஜிகாஃபைபர் சேவை அறிமுகம் செய்யப்பட்டது. இந்த சேவையின் கீழ் ரிலையன்ஸ் ஜியோ அதிவேக பிராட்பேண்ட் சேவை, நேரலை தொலைகாட்சி சேனல்கள், போன் இணைப்பு உள்ளிட்டவற்றை வழங்குகிறது.

 டெலிகாம் சந்தையை தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் பிராட்பேண்ட் சந்தையில் கால்பதிக்க இருப்பது அனைவரும் அறிந்ததே. ரிலையன்ஸ் நிறுவனத்தின் 2019 ஆண்டு பொதுக்குழு கூட்டம் ஆகஸ்ட் 12 ஆம் தேதி நடைபெறுகிறது. இவ்விழாவில் ஜியோஜிகாஃபைபர் சேவை வணிக ரீதியில் வெளியிடப்படலாம் என தெரிகிறது.

ஏற்கனவே வெளியான விவரங்களின் படி ரிலையன்ஸ் ஜியோஜிகாஃபைபர் சேவைகள் மாதம் ரூ. 600 எனும் துவக்க கட்டணத்தில் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இதில் வாடிக்கையாளர்களுக்கு அதிவேக டேட்டா, தொலைகாட்சி மற்றும் லேண்ட்லைன் சேவைகள் வழங்கப்படுகிறது. இத்துடன் ஜியோ செயலிகளை பயன்படுத்தும் வசதியும் வழங்கப்படுகிறது.

ஜியோஜிகாஃபைபர் சேவையில் வாடிக்கையாளர்களுக்கு டேட்டா வேகம் அதிகபட்சம் 1Gbps இல் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இது அதிகபட்ச வேகம் என்பதால், இதற்கான கட்டணமும் அதிகமாக இருக்கும் என தெரிகிறது. எனினும், மலிவு விலை சலுகையில் டேட்டா வேகம் குறைவாக இருக்கும் என கூறப்படுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo