ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது ஜியோஃபைபர் பிராட்பேண்ட் நீண்ட கால சலுகைகளுக்கு கேஷ்பேக் சலுகையை அறிவித்துள்ளது. அதன்படி ஜியோஃபைபர் பிராட்பேண்ட் சேவையில் ஆறு மாதங்கள், 12 மாதங்கள் மற்றும் 24 மாத சலுகைகளை தேர்வு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 10 சதவீதம் கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இந்த சேவை பிரான்ஸ் சலுகையை தேர்வு செய்தோருக்கு பொருந்தாது.
ரிலையன்ஸ் ஜியோ ஃபைபர் பிராட்பேண்ட் சேவைகள் பிரான்ஸ், சில்வர், கோல்டு, டைமண்ட் மற்றும் பிளாட்டினம் சலுகைகளில் கிடைக்கிறது. தேர்வு செய்யப்பட்ட வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை பயன்படுத்துவோருக்கு 10 சதவீதம் கேஷ்பேக் வழங்கப்படுகிறது.
புதிய கேஷ்பேக் சலுகை சில்வர் மற்றும் அதற்கும் அதிகமான சலுகைகளுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. சரியான பேமென்ட் முறைகளில் ஜியோஃபைபர் சேவைகளை ரீசார்ஜ் செய்யும் போது 90 நாட்களில் கேஷ்பேக் கிரெடிட் செய்யப்படும். பிரான்ஸ் சலுகை ஒருவருட வேலிடிட்டி கொண்டிருப்பதால், கேஷ்பேக் சலுகை பொருந்தாது.
இத்துடன் HD TV செட் மற்றும் இலவச லேண்ட்லைன் அழைப்புகள் வழங்கப்படுகிறது. மேலும் வங்கிகளுடன் இணைந்து மாத தவணை முறை வசதியும் வழங்கப்படுகிறது. இதை கொண்டு வாடிக்கையாளர்கள் வருடாந்திர சலுகைகளை தேர்வு செய்து அதற்கான கட்டணத்தை மாத தவணையில் செலுத்தலாம்.
ஜியோஃபைபர் சலுகை இந்தியாவில் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. எனினும், செப்டம்பர் 5 ஆம் தேதி வரை இந்த சேவை வணிக ரீதியில் துவங்கப்படவில்லை. இந்த சேவையில் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 699 விலையில் 100mbps வேகத்தில் இணைய சேவையை வழங்குகிறது.