இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோ 5G சேவையை கொண்டுவர திடட்மிட்டுள்ளது…!

இந்தியாவில் ரிலையன்ஸ்  ஜியோ  5G  சேவையை கொண்டுவர  திடட்மிட்டுள்ளது…!
HIGHLIGHTS

இந்தியாவில் ஜியோ 5ஜி சேவைகள் 2020-ம் ஆண்டின் மத்தியில் துவங்கும் என எதிர்பார்க்கலாம்.

இந்திய டெலிகாம் சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ  வருகைக்கு பிறகு மற்ற பல நிறுவங்களும் திண்டாடி வரும் நிலையில் இப்பொழுது  புது 5G சேவையை கொண்டுவர  திட்டமிட்டுள்ளது  ஏற்கனவே 3G  லிருந்து 4G  அதுமட்டுமல்லாமல் ஏகப்பட்ட  ஆபர்  மற்றும் டேட்டாக்களை வாரி  வழங்கி வருகிறது ஏற்கனவே வழங்கி வரும் பல சலுகையை கொண்டு மற்ற பல டெலிகாம் நிறுவங்களும் தங்கள் பயனர்களை தக்க வைத்து கொள்ள முடிந்த அளவு போராடி வருகின்ற இப்பொழு இந்நிலையில் ஏர்டெல்  புதியதாக 5G சேவையையும் கொண்டு வர இருக்கிறது 

புதிய சலுகை மட்டுமின்றி நாட்டில் 4ஜி சேவை பயன்பாடும் வேகமாக அதிகரிக்க ரிலையன்ஸ் ஜியோ மிகமுக்கிய காரணமாக இருந்தது. அந்த வகையில், மற்ற நிறுவனங்களுக்கு முன்னதாகவே 5ஜி சேவைகளையும் முதலில் வழங்க ஜியோ திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

இதுகுறித்து இன்டர்நெட்டில் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு நடைபெற்ற ஆறே மாதங்களில் இந்தியாவில் 5ஜி சேவைகளை வழங்க ஜியோ திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. 

இந்தியாவில் அடுத்த ஆண்டு இறுதியில் 5ஜி சேவைக்கான ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு நடைபெற இருக்கும் நிலையில், இந்தியாவில் ஜியோ 5ஜி சேவைகள் 2020-ம் ஆண்டின் மத்தியில் துவங்கும் என எதிர்பார்க்கலாம்.

“5ஜி-க்கு தேவையான எல்.டி.இ. நெட்வொர்க் ஜியோவிடம் தயார் நிலையில் இருக்கிறது, மேலும் புதிய தொழில்நுட்பம் சார்ந்த சேவைகளை ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்ட ஆறு மாதங்களில் வழங்க முடியும்,” என பெயர் அறியப்படாத அதிகாரி தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

இருப்பினும் இதை செயல்படுத்துவதில் இருக்கும் மிகப்பெரிய சவால், புதிய தொழில்நுட்பத்தை சீராக இயக்கும் சாதனங்கள் வெளிவர வேண்டும். புதிய தொழில்நுட்பம் தற்போதைய 4ஜி-யை விட அதிவேகமாக இன்டர்நெட் இணைப்பை பயனர்களுக்கு வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo