Jio மற்றும் Airtel ஆகியவை இந்தியாவில் இரண்டு பெரிய டெலிகாம் ஆபரேட்டர்கள். இரண்டு டெலிகாம் நிறுவனங்களும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு ப்ரீபெய்ட், போஸ்ட்பெய்ட் மற்றும் பிராட்பேண்ட் ஃபைபர் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை வழங்குகின்றன. இதுமட்டுமின்றி இரு நிறுவனங்களும் தங்களது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் சிறந்த விலையில் திட்டங்களை வழங்குவதால் இந்த இரு திட்டத்திலும் அதி பயங்கர போட்டி இருக்கிறது இந்த இரு திட்டத்திலும் எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம்.
Jio மற்றும் Airtel யின் இந்த இரு திட்டத்திலும் 296 ரூபாய் கொண்ட திட்டத்துடன் வருகிறது இருப்பினும் இதில் எந்த திட்டம் சிறந்தது
இந்த இரண்டு திட்டங்களும் 30 நாட்கள் வேலிடிட்டியாகும் இருப்பினும், இந்தத் திட்டத்தைச் சிறப்பாகச் செய்ய இரு நிறுவனங்களும் வெவ்வேறு நன்மைகளை வழங்குகின்றன, இப்போது எந்தத் திட்டம் உங்களுக்குச் சிறந்ததாக இருக்கும் என்பதை என்பதை பார்க்கலாம் ரூ.296 திட்டத்தில் இரு நிறுவனங்களும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு என்னென்ன நன்மைகளை வழங்குகின்றன என்பதை இப்போது பார்ப்போம்.
Jio யின் 296ரூபாய் கொண்ட திட்டத்தை பற்றி பேசினால், இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்களுக்கு கிடைக்கிறது, இதை தவிர இந்த திட்டத்தில் அன்லிமிடெட் காலிங் மற்றும் தினமும் 100 SMS நன்மை வழங்கப்படுகிறது இன்டர்நெட்டுக்கு இந்த திட்டத்தில் 25GB டேட்டா வழங்கப்படுகிறது, நீங்கள் இந்த டேட்டாவை முழு மாதங்களும் பயன்படுத்த முடியும், இந்த திட்டத்தில் கிடைக்கும் மாற்ற நன்மைகள் பற்றி பேசினால், JioTV, JioCinema, JioSecurity மற்றும் Jio Cloud அக்சஸ் பயன்படுத்தலாம்.
இதுமட்டுமில்லாமல் இந்த திட்டத்தில் Unlimited 5G டேட்டா வழங்கப்படுகிறது இதை பெற உங்களின் இடங்களில் 5G நெட்வர்க் மற்றும் உங்கள் போன் 5G ஆக இருக்க வேண்டும்.
Airtel யின் இந்த திட்டதி பற்றி பேசினால், இதில் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் காலிங் வழங்கப்படுகிறது இதை தவிர இந்த திட்டத்தில் தினமும் 100 SMS பெற முடியும் இதை தவிர இந்த திட்டத்தில் 25GB டேட்டா வழங்கப்படுகிறது
இருப்பினும், ஏர்டெல்லின் இந்த திட்டத்தில், வாடிக்கையாளர்கள் அப்பல்லோ 24|7 வட்டத்தின் நன்மைகள் மற்றும் Fastag இல் ரூ. 100 கேஷ்பேக், இலவச HelloTunes மற்றும் Wynk மியூசிக்கிற்கான இலவச அணுகல் ஆகியவற்றுடன் கூடுதல் பலன்களைப் பெறுகின்றனர். ஏர்டெல்லின் இந்த திட்டத்தின் வேலிடிட்டியும் 30 நாட்கள் ஆகும்.
இதையும் படிங்க: Airtel யின் இந்த பிளானில் OTT இலவவசமாக பார்க்கலாம்
இப்பொழுது இந்த திட்டத்தின் நன்மையை பெற்றி பேசினால்,ரூ.296 திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு ஜியோ மற்றும் ஏர்டெல் திட்டங்கள் என்ன பலன்களை வழங்குகின்றன என்பதை நீங்களே இப்போது பார்த்திருப்பீர்கள். இரண்டு திட்டங்களின் நன்மைகளைப் பார்த்த பிறகு, இந்த திட்டங்களிலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான நன்மைகள் உள்ளன என்பது தெளிவாகிறது. இருப்பினும், இரண்டு திட்டங்களிலும் சில கூடுதல் நன்மைகள் தனித்தனியாக கிடைக்கின்றன. எந்த டெலிகாம் நிறுவனத்தின் திட்டம் நீங்கள் வாங்குவதற்கு சரியானது என்பதை நீங்களே எங்களுக்கு சொல்லலாம்.