Airtel VS Reliance Jio:ரூ,666 வரும் இந்த திட்டத்தில் எது best
Reliance Jio நாட்டின் மிக பெரிய டெலிகாம் நிறுவனமாக இருக்கிறது
ரூ.666 விலையில் இருக்கும் ரீசார்ஜ் திட்டத்தில் எந்த நிறுவனம் அதிக நன்மைகளை வழங்குகிறது
ஜியோ அல்லது ஏர்டெல் ரூ 666 திட்டத்தில் எந்த நிறுவனம் அதிக பலன்களை வழங்குகிறது
Reliance Jio நாட்டின் மிக பெரிய டெலிகாம் நிறுவனமாக இருக்கிறது, ஏர்டெல் நிறுவனமும் குறைந்தபாடில்லை. இரண்டு நிறுவனங்களும் அந்தந்த வாடிக்கையாளர்களுக்கு வெவ்வேறு திட்டங்களைக் கொண்டுள்ளன. சில திட்டங்கள் வெவ்வேறு நன்மைகளுடன் வெவ்வேறு விலைகளில் வருகின்றன. அதே விலையில் வரும் சில ரீசார்ஜ் திட்டங்கள் இருந்தாலும் வெவ்வேறு பலன்களை வழங்குகின்றன.
இன்று நாம் Reliance Jio மற்றும் Airtel யின் 666ரூபாயின் விலையில் வரும் திட்டத்தை பற்றி பேசினால், ரூ.666 விலையில் இருக்கும் இந்த ரீசார்ஜ் திட்டத்தில் எந்த நிறுவனம் உங்களுக்கு அதிக நன்மைகளை வழங்குகிறது என்பதைப் பார்ப்போம். ரிலையன்ஸ் ஜியோ அல்லது ஏர்டெல் ரூ 666 திட்டத்தில் எந்த நிறுவனம் பலன்களை வழங்குகிறது
Jio யின் 666 ரூபாயில் வரும் நன்மைகள்
Reliance Jio வின் 666 ரூபாய் கொண்ட இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்களுக்கு கிடைக்கிறது, இதை தவிர jio ரீச்சார்ஜ் திட்டத்தில் தினமும் 1.5GB டேட்டா வழங்கப்படுகிறது இருப்பினும், நீங்கள் டேட்டா நுகர்வு முடிந்தால், இன்டர்நெட் ஸ்பீட் பெரிய அளவில் குறைகிறது. ஜியோ இந்த திட்டத்தில் ஒரு சிறப்பு சலுகையையும் வழங்குகிறது, அதாவது, ஜியோவின் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் 5G இன்டர்நெட்டை வழங்குகிறது.
JIo யின் இந்த இந்த ரீசார்ஜ் திட்டத்தில் அன்லிமிடெட் காலிங் கிடைக்கும். இது தவிர, இந்த திட்டத்தில் தினமும் 100 SMS வழங்கப்படுகிறது. இது மட்டுமின்றி, ஜியோவின் இந்த ரீசார்ஜ் திட்டத்தில், வாடிக்கையாளர்கள் JioTV, JioCinema மற்றும் JioCloud ஆகியவற்றுக்கான எக்சஸ் வழங்குகிறது.
Airtel யின் 666 ரூபாயில் வரும் நன்மைகள்.
Airtel யின் இந்த ரீச்சார்ஜ் திட்டத்தின் வேலிடிட்டி பற்றி பேசினால், இதில் 77 நாட்கள் இருக்கிறது, இதை தவிர இந்த திட்டத்தில் 1.5GB டேட்டா நன்மையும் வழங்கப்படுகிறது., இந்த திட்டத்தில், வாடிக்கையாளர்கள் அன்லிமிடெட் 5G இன்டர்நெட்டை பயன்படுத்தலாம். ஏர்டெல் திட்டத்தில் வாடிக்கையாளர்கள் அன்லிமிடெட் கால்களை வழங்குகிறது இது தவிர, இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 100 SMS வழங்கப்படுகிறது.
இது தவிர, ஏர்டெல் திட்டத்தில், வாடிக்கையாளர்கள் அப்பல்லோ 24/7 வட்டம், இலவச ஹலோ ட்யூன்ஸ் மற்றும் வின்க் மியூசிக் ஆகியவற்றுக்கான இலவச எக்சஸ் வழங்குகிறது
Airtel VS Reliance Jio Rs 666 Plan
இரண்டு திட்டங்களையும் நீங்கள் பார்த்தால் . இரண்டு திட்டங்களிலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான பலன்கள் வழங்கப்படுவதை இங்கே காணலாம். ஆனால் ரிலையன்ஸ் ஜியோ திட்டத்தில், வாடிக்கையாளர்களுக்கு 84 நாட்கள் வேலிடிட்டியாகும் இருப்பினும், ஏர்டெல் திட்டத்தில், வாடிக்கையாளர்களுக்கு 77 நாட்கள் வேலிடிட்டியை வழங்குறது, இப்போது நீங்கள் அதிக வேலிடிட்டி வழங்குகிறது இந்த திட்டத்தில் நீங்கள் தானாகவே அதிக டேட்டாவைப் வழங்குகிறது என்பது தெளிவாகிறது.
ஒட்டுமொத்தமாக, ஜியோ திட்டத்தில் வாடிக்கையாளர்கள் 7 நாட்கள் கூடுதல் வெளிடிட்டியகும் அதாவது இந்த திட்டத்தில் 7 நாட்களுக்கு கூடுதலாக 1.5ஜிபி டேட்டாவை நீங்கள் பெறப் போகிறீர்கள். அதாவது ஏர்டெல் திட்டத்துடன் ஒப்பிடும்போது 10.5ஜிபி கூடுதல் டேட்டா கிடைக்கும்.
டிஜிட் தமிழில் அன்றாட டெக்னாலஜி யின் பல புதிய தகவல்களை துல்லியமாக வழங்குவோம். எங்கள் WhatsApp சேனலுக்கு உங்களின் சப்போர்ட் தேவை எனவே எங்களை போலோ செய்யுங்கள்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile