7 ஆண்டு நிறைவு செய்த குஷியில் Jio கூடுதலாக 21GB வரை டேட்டா இலவசம் ஆன இந்த 3 பிளானுக்கு மட்டும்

Updated on 05-Sep-2023
HIGHLIGHTS

ஜியோ தனது பயனர்களுக்கு இலவச டேட்டா மற்றும் பல சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை வழங்குகிறது.

ரிலையன்ஸ் ஜியோ 7 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

இன்று முதல் அதாவது செப்டம்பர் 5 முதல் செப்டம்பர் 30, 2030 வரை பயனர்கள் இந்தச் சலுகையைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

ரிலையன்ஸ் ஜியோ 7 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.  (Jio Anniversary ) இந்த ஆண்டு நிறைவையொட்டி, ஜியோ தனது பயனர்களுக்கு இலவச டேட்டா மற்றும் பல சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை வழங்குகிறது. இதன் கீழ் பயனர்கள் 21ஜிபி வரை கூடுதல் டேட்டாவை அனுபவிக்க முடியும். இன்று முதல் அதாவது செப்டம்பர் 5 முதல் செப்டம்பர் 30, 2033 வரை பயனர்கள் இந்தச் சலுகையைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்த சிறப்பு சந்தர்ப்பத்தில், மூன்று சிறப்பு வகையான ரீசார்ஜ் திட்டங்களை ஜியோ அறிமுகப்படுத்தியுள்ளது.

Jio 299,ரூபாய் பிளான்   மற்றும் ஸ்பெஷல்  நன்மை

ஜியோவின் இந்த திட்டத்தை பற்றி பேசினால் இதில் 28 நாட்கள் வேலிடிட்டி  வழங்கப்படுகிறது, மேலும் இந்த திட்டத்தில் பயனர்களுக்கு தினமும் 2GB டேட்டா  வழங்கப்படுகிறது இதை தவிர இதில்  அன்லிமிடெட்  வொயிஸ் காலிங்  மற்றும் தினமும் 100SMS நன்மையும் வழங்கப்படுகிறது., இந்த  திட்டத்தின் ஸ்பெஷல்  ஆபராக  7GB கூடுதல்  டேட்டா வழங்கப்படுகிறது 

Jio ரூ,749 பிளான்  மற்றும் ஸ்பெஷல்  நன்மை

ஜியோவின் ரூ  ரூ,749திட்டதி பற்றி பேசினால், இந்த திட்டத்தில் தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கப்படும். இந்த திட்டம் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் தினசரி 100 இலவச SMS வசதியுடன் வருகிறது. இந்த திட்டம் 90 வேலிடிட்டியுடன் வருகிறது. மேலும் இந்த திட்டத்தின்  ஸ்பெஷல்   ஆபாரின் கீழ்  மேலும், 14 ஜிபி கூடுதல் டேட்டா வழங்கப்படும். இதற்கு 7ஜிபி அளவிலான இரண்டு டேட்டா கூப்பன்கள் வழங்கப்படும்.

Jio ரூ,2999 பிளான் மற்றும் ஸ்பெஷல்  நன்மை

ஜியோவின் இந்த திட்டத்தை பற்றி பேசினால், இது 365 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது, மேலும் இந்த  திட்டத்தில் தினமும் 2.5GB டேட்டா வழங்கப்படுகிறது, . இது தவிர, மற்ற இரண்டு திட்டங்களைப் போலவே, அன்லிமிடெட் வைஸ் காலிங் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் வழங்கப்படும். மேலும் இதில்  ஸ்பெஷல் ஆபராக , AJIO யிலிருந்து ஷாப்பிங் செய்ய ரூ.200 தள்ளுபடி கிடைக்கும். அதே நெட்மெட்களுக்கு 20 சதவீதம் மற்றும் அதிகபட்சமாக ரூ.800 தள்ளுபடி கிடைக்கும். அதே ஸ்விக்கிக்கு ரூ.100 தள்ளுபடி கிடைக்கும். 149 ரூபாய்க்கு மேல் வாங்கும் போது இலவச மெக்டொனால்டு உணவு வழங்கப்படும். ரிலையன்ஸ் டிஜிட்டலுக்கு 10 சதவீதம் தள்ளுபடி கிடைக்கும். பயண விமானங்களில் 500 தள்ளுபடி. மேலும் ஹோட்டல்களில் அதிகபட்சமாக ரூ.4000 தள்ளுபடி கிடைக்கும். இதை தவிர  இதனுடன் 21 ஜிபி கூடுதல் டேட்டாவும் கிடைக்கும். இதற்கு 7 ஜிபி அளவிலான மூன்று டேட்டா கூப்பன்கள் வழங்கப்படும்

நீங்கள்  மேலே குறிபிட்டுள்ள அனைத்து கூடுதல் நன்மையும்  My jio  Account யிலிருந்து பார்க்கலாம்  இந்த  ஸ்பெஷல் ரீச்சார்ஜ்  அனைத்தும்  நீங்கள் ரீச்சார்ஜ்  செய்த உடனே எக்ஸ்ட்ரா டேட்டா வவுச்சர் கிடைக்கும் மேலும்  நீங்கள் இதை  MyJio app மூலம் அதை  ரீடிம் செய்ய முடியும்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :