ஜியோ பிரத்யேக செட்-டாப் பாக்ஸை அறிமுகப்படுத்துகிறது, வீடியோ கான்பரன்சிங்கில் சிறந்த கேமிங் அனுபவம்.
, ஜியோ ஆன்லைன் மல்டி பிளேயர் கேமிங் அம்சத்தையும் மேலும் மேம்பட்டதாக வழங்கியுள்ளது. விவரங்களை அறிந்து கொள்வோம்.
ரிலையன்ஸ் ஜியோ ஜிகாஃபைபர் மற்றும் ஜியோ செட்-டாப் பாக்ஸை அறிவித்துள்ளது. தொழில்நுட்பத்தைப் பொறுத்தவரை இது தற்போதைய செட்-டாப் பாக்ஸை விட மிகவும் முன்னால் உள்ளது. வீடியோ கான்பரன்சிங் மூலம் ஒரே நேரத்தில் நான்கு பேருடன் நீங்கள் பேச முடியும் என்பதே இதன் மிகப்பெரிய அம்சம். இதனுடன், ஜியோ ஆன்லைன் மல்டி பிளேயர் கேமிங் அம்சத்தையும் மேலும் மேம்பட்டதாக வழங்கியுள்ளது. விவரங்களை அறிந்து கொள்வோம்.
செட்டப் பாக்சிலிருந்தே கிடைக்கும் வீடியோ காலிங்
ஜிகாஃபைபர் பயனர்களுக்கு ஜியோ வழங்கும் செட்-டாப்பக்ஷிலிருந்து வீடியோ கான்பரன்சிங் கால்கள் செய்யலாம். வீடியோ கான்பரன்சிங் மூலம் பயனர்கள் ஒரே நேரத்தில் நான்கு நபர்களுடன் இந்த செட்-டாப் பாக்ஸ் உடன் இணைக்க முடியும். வீடியோ கான்பரன்சிங் டிவி மற்றும் மொபைல் மற்றும் டேப்லெட்டிலிருந்து செய்யலாம்.
சிறந்த கேமிங் அனுபவம்
செட்-டாப் பாக்ஸ் பயனர்களுக்கு சிறந்த கேமிங் அனுபவத்தையும் வழங்கும். வீடியோ கான்பரன்சிங் போலவே, பயனர்களும் தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை கேமிங்கில் ஈடுபடுத்த முடியும். இதற்காக, செட்-டாப் பாக்சில் மல்டிபிளேயர் கேமிங் அம்சமும் வழங்கப்பட்டுள்ளது. இந்த கன்சோல் தரமான கேமிங் ஆதரவுடன் வரும்.
கேம் டெவலப்பர்களின் பார்ட்னர்ஷிப்.
ஜியோ செட்-டாப் பாக்ஸ் பயனர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த கேமிங்கை வழங்க ரிலையன்ஸ் உலகின் சிறந்த கேமிங் நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்துள்ளது. இதில் டென்சென்ட் கேம்ஸ் மற்றும் மைக்ரோசாப்ட் மற்றும் PUBG மொபைல் தயாரிக்கும் பல நிறுவனங்கள் அடங்கும்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile