ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு 4K செட் டாப் பாக்ஸ் வழங்க துவங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரீவியூ சேவையில் இருந்து கட்டண இணைப்புகளுக்கு மாறும் வாடிக்கையாளர்களுக்கு ஜியோ செட் டாப் பாக்ஸ்களை வழங்க துவங்கி இருப்பதாக கூறப்படுகிறது.
இது இரண்டு மாதங்களுக்கு முன் ஜியோ அறிவித்த ட்ரிபில் பிளே பிராட்பேண்ட் சலுகைகளின் கீழ் வழங்கப்படுவதாக தெரிகிறது. இதன் மூலம் ஜியோஃபைபர் சோதனை நிறைவுற்றதாக ஜியோ தெரிவித்துள்ளது. அதன்படி ஜியோஃபைபர் பிரீவியூ சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் கட்டண சேவைக்கு மாற வேண்டும்.
செட் டாப் பாக்ஸ் பயன்படுத்த வாடிக்கையாளர்கள் கேபிள் டி.வி. இணைப்பு வைத்திருக்க வேண்டும். தற்சமயம் கிடைத்து இருக்கும் தகவல்களில் வாடிக்கையாளர்கள் கேபிள் டி.வி. இணைப்பின்றி 150 நேரலை டி.வி. சேனல்களை பார்க்க முடியும்.
ரிலையன்ஸ் ஜியோவின் ட்ரிபில் பிளே சலுகைகள் ரூ. 699 எனும் துவக்க விலையில் கிடைக்கின்றன. செட் டாப் பாக்ஸ் மற்றும் கேபிள் டி.வி. சேவை பற்றி அதிகளவு விவரங்கள் வழங்கப்படவில்லை. எனினும், இதுகுறித்து வெளியான தகவல்களில் அனைத்து ஜியோஃபைபர் பிராட்பேண்ட் சலுகைகளுடன் இலவச செட் டாப் பாக்ஸ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இத்துடன் செட் டாப் பாக்ஸ் உடன் ஜியோ டி.வி. பிளஸ் எனும் புதிய செயலி பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளது. இது ஒ.டி.டி. தளங்களில் இருக்கும் தகவல்களை இணைக்கிறது.
ஜியோஃபைபர் செட் டாப் பாக்ஸ் உடன் ஜியோடிவி ஆப் பிரீ-இன்ஸ்டால் செய்யப்படாது. இதனால் ஜியோஃபைபர் செட் டாப் பாக்ஸ் கொண்டு ஜியோ டி.வி. செயலியில் உள்ள 650 நேரலை டி.வி. சேனல்களை பார்க்க முடியாது.