ட்ராய் யின் அதிரடி அறிவிவிப்பு மீண்டும் முதலிடம் பிடித்த ரிலையன்ஸ் ஜியோ.

Updated on 21-Aug-2019

இந்திய டெலிகாம் சந்தையில் ஜூலை மாதம் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் நாட்டின் அதிவேக 4ஜி டவுன்லோடு வேகம் வழங்கிய நிறுவனங்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. ஜூலை மாதத்தில் ஜியோவின் 4ஜி டவுன்லோடு வேகம் நொடிக்கு 21 மெகாபைட் (21Mbps) ஆக இருந்தது. ஜூன் மாதம் இது 17.6Mbps ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையமான டிராய் வெளியிட்ட தகவல்களின்படி ஏர்டெல் டவுன்லோடு வேகம் 8.8Mbps ஆகவும், வோடபோன் 7.7Mbps ஆகவும், ஐடியா செல்லுலார் 6.6Mbps ஆக இருந்தது. பி.எஸ்.என்.எல். நிறுவனம் அதிவேக 3ஜி நெட்வொர்க் ஆக இருந்தது.

வோடபோன் நிறுவனம் ஜுலை மாதம் 5.8 Mbps அப்லோடு வேகம் வழங்கியிருக்கிறது. ஐடியா செல்லுலார் 5.3 Mbps அப்லோடு வேகமும், ஜியோ 4.3 Mbps, ஏர்டெல் நிறுவனம் 3.2 Mbps அப்லோடு வேகம் வழங்கியிருக்கின்றன.

ஜுலையில்BSNL . சராசரி டவுன்லோடு வேகம் 2.5 Mbps ஆக இருந்தது. இதைத் தொடர்ந்து ஐடியா 2 Mbps, வோடபோன் 1.9 Mbps மற்றும் ஏர்டெல் 3ஜி 1.4 Mbps வேகம் வழங்கியிருக்கின்றன. டவுன்லோடு வேகம் தவிர அப்லோடு வேகங்களில் வோடபோன் நிறுவனம் முதலிடம் பிடித்துள்ளது.

பயனர் வீடியோ பார்க்கும் போது டவுன்லோடு வேகம் முக்கிய பங்காற்றுகிறது. டவுன்லோடு வேகம் கொண்டே இன்டர்நெட் பிரவுசிங், ஈமெயில் பயன்பாடு உள்ளிட்டவற்றை மேற்கொள்ளப்படுகின்றன. பயனர் புகைப்படங்கள், வீடியோக்களை ஈமெயில் அல்லது சமூக வலைத்தளங்கள் மூலம் பகிர்ந்து கொள்ளும் போது அப்லோடு வேகம் தேவைப்படுகிறது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :