Reliance Jio இந்தியாவின் மிக பெரிய டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றாகும் SonyLIV மற்றும் Zee5 யின் OTT நன்மைகளை ஒரே நேரத்தில் வழங்குகிறது. செயலில் உள்ள சேவை வேலிடிட்டியாகும் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் SMS மற்றும் டேட்டா பலன்களை வழங்கும் இந்த நிறுவனத்தின் ப்ரீபெய்ட் திட்டங்களில் இந்த OTT பிளாட்பர்ம்களுக்கு நீங்கள் அக்சஸ் பெறலாம் இங்கு நாம் பேசும் இரண்டு திட்டங்களும் ரூ.3662 மற்றும் ரூ.909க்கு வருகின்றன. இந்த இரண்டு திட்டங்களும் 2023 யில் அறிவிக்கப்பட்டது மற்றும் நாடு முழுவதும் உள்ள அனைத்து கஸ்டமர்களுக்கும் கிடைக்கும். மேலும், இந்த திட்டங்களில் பயனர்கள் அன்லிமிடெட் 5G டேட்டாவையும் வழங்கப்படுகிறது அவற்றின் பலன்களை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.3662 திட்டத்தில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் தினசரி 2.5ஜிபி டேட்டா, நாள் ஒன்றுக்கு 100 SMS மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா வழங்கப்படுகிறது. Zee5, SonyLIV, JioTV, JioCinema மற்றும் JioCloud போன்ற கூடுதல் நன்மைகள் இந்தத் திட்டத்தில் கிடைக்கும். JioTV மொபைல் ஆப் மூலம் பயனர்களுக்கு SonyLIV மற்றும் Zee5 சப்ஸ்க்ரிப்சன் வழங்கப்படும் என்பதை நினைவில் கொள்ளவும். JioTV யில் ஒரு சிங்கிள் லோகின் கீழ், இந்த இரண்டு தளங்களின் உள்ளடக்கத்தையும் நீங்கள் பார்க்கலாம். இந்த திட்டத்தின் சேவை வேலிடிட்டி காலம் 365 நாட்கள் அதாவது 1 ஆண்டு வரை உள்ளது
ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.909 திட்டத்தில், பயனர்கள் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் 2ஜிபி தினசரி டேட்டா மற்றும் 84 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 100 SMS ஆகியவற்றைப் வழங்குகிறது இந்த திட்டத்தின் கூடுதல் நன்மைகள் அன்லிமிடெட் 5G டேட்டா, SonyLIV மற்றும் Zee5, JioTV, JioCinema மற்றும் JioCloud. போன்ற நன்மை வழங்கப்படுகிறது
அன்லிமிடெட் 5G டேட்டாவைப் பெற, ஜியோ பயனர்கள் ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு இரண்டிற்கும் கிடைக்கும் MyJio ஆப்யில் இருந்து Jio வெல்கம் ஆஃபரைப் பெற வேண்டும். ஜியோ வெல்கம் ஆஃபர், திட்டத்துடன் வரும் FUP டேட்டாவைப் பாதிக்காமல், பயனர்கள் ஹை ஸ்பீட் 5G டேட்டாவை அனுபவிக்க அனுமதிக்கிறது. நீங்கள் 4G கவரேஜ் பகுதியில் இருந்தால் அல்லது 4G ஃபோனை வைத்திருந்தால், உங்கள் FUP டேட்டா ஏற்படும். இருப்பினும், பயனரிடம் 5G SA ஆதரவு சாதனம் இருந்தால், அவர் தனது போனில் 5G டேட்டாவை பெறலாம்.
இதையும் படிங்க Tata Play யின் புதிய திட்டம் ஒரு பிளானில் கிடைக்கும் 30க்கு மேற்பட்ட OTT நன்மை