ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 2018 ஆண்டில் ரூ. 11, ரூ. 21, ரூ. 51 மற்றும் ரூ. 101 விலையில் ஆட்-ஆன் சலுகைகளை அறிவித்தது. இவற்றில் வாடிக்கையாளர்களுக்கு முறையே 400 எம்.பி., 1 ஜி.பி., 3 ஜி.பி. மற்றும் 6 ஜி.பி. டேட்டா வழங்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் ரிலையன்ஸ் ஜியோ தற்சமயம் இருமடங்கு டேட்டா வழங்குவதாக தெரிவித்துள்ளது.அந்த வகையில் இந்த சலுகைகளில் வாடிக்கையாளர்களுக்கு 75, 200, 500 மற்றும் 1000 நிமிடங்கள் வாய்ஸ் கால் வழங்கப்படுகின்றன. இவற்றில் வேலிடிட்டி வழங்கப்படவில்லை என்பதால், வழக்கமான ரீசார்ஜ் சலுகைக்கான வேலிடிட்டி இருக்கும் வரை இதற்கான வேலிடிட்டி இருக்கும்.
இதுதவிர ஜியோவில் இருந்து மற்ற நெட்வொர்க் எண்களுக்கு மேற்கொள்ளப்படும் வாய்ஸ் கால் அழைப்புகளுக்கான நிமிடங்களும் இருமடங்கு அதிகமாக வழங்கப்படுகின்றன.அதன்படி ஆட்-ஆன் சலுகைகளில் வாடிக்கையாளர்களுக்கு தற்சமயம் 800 எம்.பி., 2 ஜி.பி., 6 ஜி.பி. மற்றும் 12 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகின்றன.
இந்த சலுகைகளில் உள்ள டேட்டா, வழக்கமான சலுகையில் உள்ள டேட்டா தீர்ந்து போனதும் பயன்படுத்தப்படுகிறது. இவற்றில் எத்தனை வவுச்சர்களை வேண்டுமானாலும் வாடிக்கையாளர்கள் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். முதலில் ரீசார்ஜ் செய்த சலுகைக்கான டேட்டா தீர்ந்ததும் அடுத்த சலுகை பயன்படுத்தப்படும்.