இந்தியாவில் பிரீபெயிட் பயனர்களுக்கு E சிம் சேவையை வழங்கும் முதல் நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோ மட்டும் தான் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
புதிய ஐபோன்களில் வழங்கப்பட்டு இருக்கும் மேம்படுத்தப்பட்ட இசிம் வசதி ஜியோ பிரீபெயிட் மற்றும் போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்சமயம் பிரீபெயிட் பயனர்களுக்கும் இசிம் சேவையை வழங்கும் ஒற்றை நிறுவனமாக ஜியோ இருக்கிறது.
ஜியோ மற்றும் பாரதி ஏர்டெல் நிறுவனங்கள் புதிய ஐபோன்களான ஐபோன் XS மற்றும் ஐபோன் XS மேக்ஸ் மாடல்களில் இசிம் சேவையை வழங்க ஆப்பிள் நிறுவனத்துடன் இணைந்துள்ளன.
ஆப்பிள் நிறுவனம் முதல் முறையாக தனது Iphone XS மற்றும் Iphone XS மேக்ஸ் மாடல்களில் டூயல் சிம் வசதியை வழங்கியது. டூயல் சிம் வசதி ஒரு நானோ சிம் மற்றொன்றில் டிஜிட்டல் இசிம் வடிவில் வழங்கப்படுகிறது.
இந்தியாவில் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் கடந்த ஆண்டு ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 மாடலில் இசிம் வசதியை வழங்க முன்வந்தன.