ஜியோ வழங்குகிறது 8ஜிபி டேட்டா அதிரடி இலவச டேட்டா…!
இந்த சலுகையை பயனர்கள் தங்களது மைஜியோ செயலியில் மை பிளான்ஸ் ஆப்ஷனில் பார்க்க முடியும். ஜியோ பயனர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் நிலையில், அனைத்து பயனர்களுக்கும் இலவச டேட்டா கிரெடிட் ஆக சில காலம் ஆகும் என தெரிகிறது.
இந்திய டெலிகாம் சந்தையில் சேவையை வழங்க துவங்கியது முதல் இன்று ரிலையன்ஸ் ஜியோ அதன் பயனர்களுக்கு வழங்கி வரும் சலுகைகள், போட்டி நிறுவனங்களை வெகுவாக பாதித்து வருகிறது. இதனால் ஜியோ சலுகைக்கு போட்டியாக போட்டி நிறுவனங்களும்
புதிய சலுகைகளை அறிவித்து வருகின்றன.
செப்டம்பர் மாதத்தில் ரிலையன்ஸ் ஜியோ இந்தியாவில் சேவையை துவங்கி இரண்டு ஆண்டுகள் நிறைவுற்றதை கொண்டாடும் வகையில், ஜியோ செலபிரேஷன்ஸ் ஆஃபர் என்ற பெயரில் பயனர்களுக்கு இலவச சேவைகளை வழங்கியது. அந்த வகையில் பயனர்களுக்கு செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் கூடுதலாக 8 ஜி.பி. டேட்டா பயனர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.
தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் ஜியோ பயனர்களுக்கு 8 ஜி.பி. இலவச டேட்டா வழங்கப்படுகிறது.
ஜியோ வழங்கி இருக்கும் 8 ஜி.பி. கூடுதல் டேட்டா நான்கு நாட்கள் வேலிடிட்டி கொண்டிருக்கிறது. இதன் மூலம் பயனர்களுக்கு தினமும் 2 ஜி.பி. டேட்டா இலவசமாக வழங்கப்படுகிறது. ஜியோ வழங்கும் இலவச டேட்டா, பயனர்கள் கணக்கில் தானாக சேர்க்கப்படுகிறது.
இந்த சலுகையை பயனர்கள் தங்களது மைஜியோ செயலியில் மை பிளான்ஸ் ஆப்ஷனில் பார்க்க முடியும். ஜியோ பயனர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் நிலையில், அனைத்து பயனர்களுக்கும் இலவச டேட்டா கிரெடிட் ஆக சில காலம் ஆகும் என தெரிகிறது.
எனினும், ஜியோ செலபிரேஷன்ஸ் ஆஃபர் அனைத்து பிரீபெயிட் பயனர்களுக்கும் வழங்கப்படுகிறது. அந்த வகையில் இலவசமாக வழங்கப்படும் கூடுதல் டேட்டா நவம்பர் மாதத்திலேயே அனைவருக்கும் வழங்கப்படும் .
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile