RELIANCE JIO NEW TARRIF: திட்டம் இன்று முதல் அமல் புதிய திட்டம் என்ன வாங்க பாக்கலாம்.

RELIANCE JIO NEW TARRIF:  திட்டம் இன்று முதல் அமல் புதிய திட்டம் என்ன வாங்க பாக்கலாம்.
HIGHLIGHTS

புதிய ஆல் இன் ஒன் திட்டங்களை கொண்டுள்ளது, அதில் அன்லிமிட்டட் ஜியோ கால்கள் மற்றும் டேட்டா சேவை வழங்குகிறது.

பாரதி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியாவும் தங்கள் ப்ரீபெய்ட் கட்டண திட்டங்களின் விலையை அதிகரித்துள்ளன.

டெலிகாம் நிறுவங்களான ரிலையன்ஸ் ஜியோ புதன்கிழமை கட்டண உயர்வு அறிவித்தது, இது இன்றிரவு தொடங்கும். தற்போதுள்ள திட்டங்களுடன் ஒப்பிடும்போது இந்த புதிய ப்ரீபெய்ட் திட்டங்கள் 40% அதிகரிப்புடன் வரும் என்று நிறுவனம் ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், பாரதி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியாவும் தங்கள் ப்ரீபெய்ட் கட்டண திட்டங்களின் விலையை அதிகரித்துள்ளன.

இதனுடன்  Reliance Jio அதன் பயனர்களின் புதிய ஆல் இன் ஒன் திட்டங்களை கொண்டுள்ளது, அதில் அன்லிமிட்டட்  ஜியோ கால்கள் மற்றும் டேட்டா சேவை வழங்குகிறது.

ஜியோவின் ஆல் இன் ஒன் திட்டங்களில் ரூ 199 முதல் ரூ .2,199 வரை திட்டங்கள் உள்ளன. நுகர்வோர் தங்கள் தேவைக்கேற்ப வெவ்வேறு ரீசார்ஜ் பேக்களைத் செலக்ட் செய்யலாம் மற்றும் இந்தத் திட்டங்கள் மாதாந்திர, மூன்று மாதங்கள், ஆறு மாதங்கள் மற்றும் ஒரு வருடம் செல்லுபடியாகும்.

RELIANCE JIO 28 DAYS VALIDITY PLANS

Reliance Jio Rs 199

இந்த திட்டத்தில் அன்லிமிட்டட் ஜியோ ஜியோவிலிருந்து மற்ற நெட்வர்க்கு பேசும்போது தினம் 1000 நிமிடம் மற்றும் தினமும்  1.5GB கிடைக்கும் மற்றும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

Reliance Jio Rs 249

Reliance Jioவின் அடுத்த திட்டத்தை பற்றி பேசினால், Rs 249 திட்டத்தில்  அன்லிமிட்டட் கால்கள் தினமும் 2GB டேட்டா மற்றும் ஜியோவிலிருந்து  து மற்ற நெட்வர்க்கு பேசும்போது தினம் 2000 நிமிடம் கிடைக்கிறது,மற்றும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

Reliance Jio Rs 349

இப்போது ரூ .349 திட்டத்தைப் பற்றி பேசினால் , இந்த திட்டம் 3 ஜிபி டேட்டாவுக்கு 3000 நிமிடங்கள், அன்லிமிட்டட் கால்கள் , ஜியோவிலிருந்து மற்ற ஆபரேட்டர்களுக்கான கால்கள் மற்றும் இந்த திட்டத்தின் கால அளவு மேலே குறிப்பிட்டுள்ள திட்டங்களைப் போல 28 நாட்களாக வைக்கப்படுகிறது.

RELIANCE JIO 56 DAYS VALIDITY PLANS
Reliance Jio Rs 399

Rs 399 யின் ஜியோவின் இந்த திட்டத்தில் அன்லிமிட்டட் கால்கள் தினமும்  1.5GB data மற்ற ஆபரேட்டர்கள் அழைப்புகளுக்கு 2000 நிமிடங்கள் கிடைக்கும், இந்த ரீசார்ஜ் திட்டத்தின் காலம் 56 நாட்கள் ஆகும்.

Reliance Jio Rs 444

ரூ .444 ரீசார்ஜ் திட்டத்தில் அன்லிமிட்டட் கால்கள் , ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் ஜியோவிலிருந்து மற்ற பயனர்களுக்கான கால்களுக்கு 2000 நிமிடங்கள் கிடைக்கும். இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும்.

RELIANCE JIO 84 DAYS VALIDITY PLANS

Reliance Jio Rs 555

ரிலையன்ஸ் ஜியோவின் ரூ 555 திட்டத்திற்கு அன்லிமிட்டட் கால்கள் , ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டா , ஜியோவிலிருந்து மற்ற ஆபரேட்டர்களுக்கான கால்களுக்கு 3,000 நிமிடங்கள் மற்றும் இந்த திட்டத்தை 84 நாட்களுக்குப் பெறலாம்.

Reliance Jio Rs 599

Rs 599 யின் திட்டத்தில் அன்லிமிட்டட் கால்கள் தினமும் 2GB  மற்றும் ஜியோவிலிருந்து மற்ற ஆபரேட்டர்களுக்கான கால்களுக்கு 3,000 நிமிடங்கள் மற்றும் இந்த திட்டத்தை 84 நாட்களுக்குப் பெறலாம்.

RELIANCE JIO LONG-TERM PLAN
Reliance Jio Rs 2,199

இந்த ரிச்சார்ஜ் திட்டத்தில் பயனர்களுக்கு தினமும்  1.5GB டேட்டா அன்லிமிட்டட் கால்கள் மற்றும் ஜியோ ஜியோவிலிருந்து மற்ற ஆபரேட்டர்களுக்கான கால்களுக்கு 12,000 நிமிடங்கள் கிடைக்கிறது.மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்களுக்கு வளங்குகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo