நீங்க டைரிமில்க் சாக்லேட் வாங்கினா 1ஜிபி இலவச டேட்டா ஸ்வீட் வாங்குங்க கொண்டாடுங்க என்ஜோய்
ரிலையன்ஸ் ஜியோ சார்பில் புதிய இலவச சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. பயனர்களுக்கு 1 ஜிபி டேட்டா இலவசமாக வழங்கும் புதிய சலுகையில் பயனர்கள் சாக்லேட் வாங்கினால் போதும்.
ரிலையன்ஸ் ஜியோ இரண்டாவது அனிவேர்சரியை தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ இப்பொழுது இலவச 4G டேட்டா வழங்குகிறது இதற்க்கு தேவை வெறும் டைரிமில்க் சாக்லெட் காகிதம் இருந்த மட்டும் போதும், அதும் நீங்க 5ரூபாய் சாக்லெட் வாக்கினிலே இது கிடைத்துவிடும் இதை தவிர மேலும் பல சாக்லேட் காகிதம் Dairy Milk Crackle, Dairy Milk Roast Almond, Dairy Milk Fruit and Nut, or Dairy Milk Lickables போன்ற அனைத்திலும் உங்களுக்கு இலவச டேட்டா கிடக்கிறது இந்த டேட்டாவை தவிர ரிலையன்ஸ் ஜியோ மற்ற ஜியோ சாப்ஸ்க்ரைபருக்கும் நீங்க இந்த இலவச டேட்டாவை ஷேர் செய்யலாம். இந்த ஆபர் செப்டம்பர் 30 வரை மட்டுமே இருக்கும்
கேட்பரி டெய்ரி மில்க் உடன் சேர்ந்து ரிலையன்ஸ் ஜியோ அதன் பயனர்களுக்கு 1 ஜிபி இலவச டேட்டா வழங்குகிறது. இலவச டேட்டா பெற பயனர்கள் டெய்ரி மில்க் சாக்லேட் கவரின் போட்டோவை மைஜியோ ஆப் யில் பதிவேற்றினால் போதும்.
ரிலையன்ஸ் ஜியோ மற்றும் டெய்ரி மில்க் சேர்ந்து வழங்கும் இலவச டேட்டாவை பெற என்ன செய்ய வேண்டும்?
– மைஜியோ ஆப் சென்று ‘Get the tastiest 1GB of data ever' என்ற பேனரை க்ளிக் செய்ய வேண்டும்
– அடுத்து சலுகையில் பங்கேற்கக் கோரும் PARTICIPATE NOW ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்
– உங்களது மொபைல் கேமராவை இயக்க செயலியை அனுமதிக்க வேண்டும்
– டெய்ரி மில்க் சாக்லேட் காலி கவரை புகைப்படம் எடுக்க வேண்டும்
– புகைப்படம் அப்லோடு ஆகும் வரை காத்திருக்க வேண்டும்
– இறுதியில் ‘KEEP 1GB’ ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்
பயனர்களின் கணக்கில் 1 ஜிபி இலவச டேட்டா கிரெடிட் ஆக ஏழு முதல் எட்டு நாட்கள் வரை ஆகும் என ஜியோ தெரிவித்துள்ளது. ஒரு ஜியோ நம்பருக்கு ஒருமுறை மட்டுமே இலவச டேட்டாவை பெற முடியும். இலவச டேட்டா வேண்டாம் என்போர், டெய்ரி மில்க் மற்றும் பிரதாம் அறக்கட்டளைக்கு வழங்கி, குழந்தைகளின் டிஜிட்டல் கல்விக்கு உதவ முடியும்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile