Reliance Jio விரைவில் கொண்டு வரும் சேட்லைட் இன்டர்நெட் சேவை

Reliance Jio விரைவில் கொண்டு வரும் சேட்லைட் இன்டர்நெட் சேவை
HIGHLIGHTS

Reliance Jio யின் சாட்லைட் அடிப்படையிலான இன்டர்நெட் சேவையான ஜியோஸ்பேஸ் ஃபைபர் விரைவில் தொடங்கலாம்

கடந்த ஆண்டு, இந்நிறுவனம் இந்தியா மொபைல் காங்கிரஸில் சாட்காம் டெக்னாலஜி காட்சிப்படுத்தியது

ஜியோஸ்பேஸ்ஃபைபர் சேவையுடன் நான்கு தொலைதூர பகுதிகளை இணைத்துள்ளதாக கூறியிருந்தது

பெரிய டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றான Reliance Jio யின் சாட்லைட் அடிப்படையிலான இன்டர்நெட் சேவையான ஜியோஸ்பேஸ் ஃபைபர் விரைவில் தொடங்கலாம். கடந்த ஆண்டு, இந்நிறுவனம் இந்தியா மொபைல் காங்கிரஸில் சாட்காம் டெக்னாலஜி காட்சிப்படுத்தியது. ரிலையன்ஸ் ஜியோ விரைவில் இந்திய ஸ்பேஸ் ப்ரோமொசனால் மற்றும் ஆதொரைட்செசன் மையத்தில் (IN-SPACe) தேவையான ஒப்புதலைப் பெறலாம்.

இது தொடர்பான தகவல் ஆதாரங்களை மேற்கோள்காட்டி மீடியா ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது, நிறுவனம் கட்டாய ஆவணங்களை IN-SPAce உடன் சமர்ப்பித்துள்ளது. சட்லைட் இன்டர்நெட் சேவைகளைத் தொடங்க, டெலிகாம் நிறுவனங்கள் பாதுகாப்பு அனுமதி மற்றும் பல அமைச்சகங்களின் ஒப்புதலைப் பெற வேண்டும்.

கடந்த ஆண்டு, இந்திய மொபைல் காங்கிரஸில், ரிலையன்ஸ் ஜியோ தனது ஜியோஸ்பேஸ்ஃபைபர் சேவையுடன் நான்கு தொலைதூர பகுதிகளை இணைத்துள்ளதாக கூறியிருந்தது. குஜராத்தில் உள்ள கிர், சத்தீஸ்கரில் உள்ள கோர்பா, ஒடிசாவின் நபரங்பூர் மற்றும் அசாமில் ஜோர்ஹாட் ஆகியவை இந்த வயல்களாகும் என ஓஎன்ஜிசி தெரிவித்துள்ளது.

நாட்டின் சிறந்த இன்டர்நெட் கனேக்ட்டிவிட்டிக்கு ரிலையன்ஸ் ஜியோ லக்சம்பர்க்கின் சேட்லைட் டெலிகம்யுநிகேசன் ப்ரோவைடர் Société Européenne des Satellites உடன் பார்ட்னர்ஷிப் இருக்கிறது. ரிலையன்ஸ் ஜியோவின் சேட்லைட் இன்டர்நெட் சேவையானது எலோன் மஸ்கின் ஸ்டார்லிங்க் மற்றும் அமேசானின் ப்ராஜெக்ட் கைபர் ஆகியவற்றுடன் போட்டியிட முடியும். இந்த வெளிநாட்டு நிறுவனங்களும் தங்கள் சேவைகளை நாட்டில் தொடங்க திட்டமிட்டுள்ளன.

சேட்லைட் இன்டர்நெட் சேவைக்கான ஸ்பெக்ட்ரம் லைசன்சிங் ப்ரோசெசிங் செய்யப்படும். இதன் மூலம், இந்த சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் ஸ்பெக்ட்ரத்தை ஏலம் எடுக்க வேண்டியதில்லை. இது Starlink க்கு பயனுள்ளதாக இருக்கும். இருப்பினும் ஏலம்தான் இதற்கு சரியான வழி என்று ரிலையன்ஸ் ஜியோ கூறுகிறது. மற்ற நாடுகளைப் போல ஸ்பெக்ட்ரத்தை ஏலம் விடவும், சேவையைத் தொடங்க உரிமம் வழங்கவும் மத்திய அரசு வேண்டாம் என்று மஸ்க்கின் ஸ்டார்லிங்க் விரும்புகிறது. இது ஒரு இயற்கை வளம் என்றும் அது நிறுவனங்களிடையே பகிரப்பட வேண்டும் என்றும் நிறுவனம் நம்புகிறது.

இதையும் படிங்க: Moto G34 5G இந்தியாவில் அறிமுக தேதி வெளியானது

ஏலம் புவியியல் கட்டுப்பாடுகளை விதிக்கலாம், இது செலவை அதிகரிக்கும் என்று ஸ்டார்லிங்க் கூறுகிறது. இதற்கு ரிலையன்ஸ் ஜியோ உடன்படவில்லை. அந்நிறுவனம் அரசுக்கு அனுப்பிய கடிதத்தில் ஸ்பெக்ட்ரம் ஏலம் விட வேண்டும் என்று கோரியிருந்தது. வெளிநாட்டு சேட்லைட் சேவை வழங்குநர்கள் வொயிஸ் மற்றும் டேட்டா சேவைகளை வழங்க முடியும் என்றும் இது நாட்டின் டெலிகாம் நிறுவனங்களுக்கு சிரமங்களை உருவாக்க வாய்ப்புள்ளது என்றும் ரிலையன்ஸ் ஜியோ கூறியிருந்தது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo