முந்தைய மாதத்துடன் ஒப்பிடும்போது இது 0.80 சதவீத வளர்ச்சியாகும். இந்திய தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.நம் நாட்டில், 2019 அக்டோபர் இறுதி நிலவரப்படி போன் இணைப்புகளின் (செல்போன்+லேண்டுலைன்) மொத்த எண்ணிக்கை 120.48 கோடியாக உயர்ந்துள்ளது.
நம் நாட்டில், நடப்பாண்டு அக்டோபர் மாதத்தில் தொலைபேசி இணைப்புகளின் மொத்த எண்ணிக்கை 120.48 கோடியாக அதிகரித்து இருக்கிறது. முந்தைய மாதத்தை விட இது 0.80 சதவீதம் அதிகமாகும். அந்த மாதத்தில், நகர்ப்புறங்களில் செல்போன் இணைப்புகள் 68.16 கோடியாக உயர்ந்து இருக்கிறது.
செப்டம்பர் மாதத்தில் அது 67.79 கோடியாக இருந்தது. கிராமங்களில் இந்த இணைப்புகள் (51.73 கோடியில் இருந்து) 52.31 கோடியாக அதிகரித்து இருக்கிறது. இதனையடுத்து செல்போன் இணைப்புகளின் மொத்த எண்ணிக்கை 118.34 கோடியாக உள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் இணைப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அக்டோபர் மாதத்தில் ஜியோ நிறுவனம் மட்டும் 91 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை சேர்த்து இருக்கிறது. இதேபோன்று பி.எஸ்.என்.எல். நிறுவனம் 2.88 லட்சம் வாடிக்கையாளர்களையும் வோடாபோன் நிறுவனம் 1.90 லட்சமும், பாரதி ஏர்டெல் நிறுவனம் 81,974 வாடிக்கையாளர்களை பெற்று இருக்கிறது.
அகன்ற அலைவரிசை இணைப்புகளின் அடிப்படையில் இந்த 5 நிறுவனங்களின் ஒட்டுமொத்த சந்தைப்பங்கு 98.98 சதவீதமாக இருக்கிறது.அடுத்து பாரதி ஏர்டெல் (13.04 கோடி), வோடாபோன் (11.57 கோடி), பொதுத்துறையை சேர்ந்த பி.எஸ்.என்.எல். (2.23கோடி) ஆகிய நிறுவனங்கள் அதிக இணைப்புகளை வழங்கி இருக்கின்றன.
அக்டோபர் மாதத்தில் அகன்ற அலைவரிசை இணைப்புகளின் எண்ணிக்கை 2.98 சதவீதம் வளர்ச்சி கண்டு 64.41 கோடியாக உயர்ந்து இருக்கிறது. முந்தைய மாதத்தில் அது 62.54 கோடியாக இருந்தது. இதில் ரிலையன்ஸ் ஜியோ அதிகபட்சமாக 36.43 கோடி இணைப்புகளுடன் முன்னிலையில் உள்ளது.