Reliance Jio Rs 199யில் அதன் புதிய போஸ்ட் பெயிட் திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது

Reliance Jio Rs 199யில் அதன் புதிய போஸ்ட் பெயிட் திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது
HIGHLIGHTS

முகேஷ் அம்பானி சொந்தமான நிறுவனம், இந்த திட்டம் மே 15 மே லிருந்து ஆரம்பிக்கும் சபஸ்க்ரிப்ஷனுக்கு இது பொருந்தும் எனக் கூறினார்

ரிலையன்ஸ் ஜியோ போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கு சீரோ-டச் எனும் புதிய போஸ்ட்பெயிட் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. 

புதிய சலுகையில் வாய்ஸ் கால், SMS , இன்டர்நெட், சர்வதேச கால்கள் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. புதிய போஸ்ட்பெயிட் சலுகை விலை ரூ.199 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 25 ஜிபி டேட்டா, சர்வதேச அழைப்புகள் நிமிடத்திற்கு 50 பைசா கட்டணத்தில் வழங்கப்படுகிறது.

இந்த சலுகையில் மற்ற போஸ்ட்பெயிட் திட்டங்களை போன்று இல்லாமல், கட்டணத்தை எப்போது வேண்டுமானாலும் பார்த்து தெரிந்து கொள்ளும் வசதி மற்றும் மாத இறுதியில் கட்டண விவரத்தை இன்பாக்ஸ்-லும் பெற முடியும். புதிய சலுகையை பயன்படுத்துவோர் உலகின் எந்த பகுதிக்கு சென்றாலும் சேவை சீராக கிடைக்கும் என ஜியோ தெரிவித்துள்ளது.

ஒரு கிளிக் மூலம் சர்வதேச ரோமிங் சேவையை ஆக்டிவேட் செய்யும் வசதி கொண்ட ஜியோ சீரோ-டச் சலுகையில் கட்டணங்கள் குறைவாகவே நிர்ணயிக்கப்பட்டுள்ளன. வாய்ஸ் கால் மேற்கொள்ள நிமிடத்திற்கு ரூ.2, ஒரு எம்பி டேட்டா ரூ.2, எஸ்எம்எஸ் ஒன்றுக்கு ரூ.2 என்றும் அன்லிமிட்டெட் சலுகைகள் நாள் ஒன்றுக்கு ரூ.500 (வரிகள் தவிர்த்து) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் எவ்வித முன்பணமும் செலுத்த வேண்டியதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ், அமெரிக்கா, தாய்லாந்து, சிங்கப்பூர், லண்டன், ஜெர்மனி, இலங்கை, மலேசியா, இத்தாலி, ஸ்பெயின், நெதர்லாந்து, துருக்கி, நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ், ஹங்கேரி, கிரீஸ், போர்ச்சுகல், ரோமானியா, செக் குடியரசு மற்றும் ஐயர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் அன்லிமிட்டெட் சலுகைகள் வழங்கப்படுகின்றன.

முகேஷ் அம்பானி சொந்தமான நிறுவனம் இந்த புதிய திட்டத்தை  ஜியோ போஸ்ட்பெயிட் சலுகை மே 15-ம் தேதி முதல் வழங்கப்படுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo