Reliance Jio அறிமுகம் செய்துள்ளது இரண்டு புதிய பிளான், தினமும் கிடைக்கும் 2.5GB டேட்டா.

Reliance Jio அறிமுகம் செய்துள்ளது இரண்டு புதிய பிளான், தினமும் கிடைக்கும் 2.5GB  டேட்டா.
HIGHLIGHTS

ரிலையன்ஸ் ஜியோ மொபைல் சந்தாதாரர்களுக்காக இரண்டு புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டங்கள் 90 நாட்கள் வேலிடிட்டியாகும்

இந்த ஜியோ திட்டங்களால் வழங்கப்படும் நன்மைகள் பற்றிய கூடுதல் விவரங்கள் இதோ:

முகேஷ் அம்பானி தலைமையிலான தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ மொபைல் சந்தாதாரர்களுக்காக இரண்டு புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. சமீபத்திய ஜியோ திட்டங்களின் விலை முறையே ரூ.899 மற்றும் ரூ.349. இரண்டு ஜியோ திட்டங்களும் MyJio ஆப், ஜியோவின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் பிற பில்லிங் தளங்களில் கிடைக்கும். புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டங்கள் 90 நாட்கள் வேலிடிட்டியாகும், தினசரி 2.5 ஜிபி டேட்டா, அன் லிமிடெட் அழைப்புகள் மற்றும் பலவற்றை வழங்குகிறது. இந்த ஜியோ திட்டங்களால் வழங்கப்படும் நன்மைகள் பற்றிய கூடுதல் விவரங்கள் இதோ:

புதிதாக அறிவிக்கப்பட்டு இருக்கும் ஜியோ சலுகைகளில் அதிகபட்சம் 90 நாட்களுக்கான வேலிடிட்டி, அன்லிமிடெட் அழைப்புகள், 2.5 ஜிபி டேட்டா மற்றும் இதர பலன்கள் வழங்கப்படுகின்றன. ரிலையன்ஸ் ஜியோ ரூ. 349 சலுகை தினமும் 2.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவைகளை 30 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்குகிறது. இதில் வேலிடிட்டி காலம் முழுக்க 75 ஜிபி டேட்டா கிடைக்கும்.

இந்த சலுகையிலும் ஜியோடிவி, ஜியோசினிமா, ஜியோசெக்யுரிட்டி மற்றும் ஜியோகிளவுட் சந்தா வழங்கப்படுகிறது. ஜியோ ரூ. 349 சலுகை போன்றே ரூ. 899 சலுகையிலும் ஜியோ அறிமுக சலுகை பொருந்தும். ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இதுவரை நாடு முழுக்க 100 நகரங்களில் ஜியோ 5ஜி சேவையை வழங்கி இருக்கிறது. மேலும் இந்த ஆண்டு இறுதிக்குள் நாடு முழுக்க 5ஜி சேவைகளை வெளியிட ரிலையன்ஸ் ஜியோ திட்டமிட்டுள்ளது.

இத்துடன் தினமும் 100 எஸ்எம்எஸ், ஜியோ டிவி, ஜியோசினிமா, ஜியோசெக்யுரிட்டி மற்றும் ஜியோகிளவுட் உள்ளிட்டவைகளுக்கான சப்போர்ட் வழங்கப்படுகிறது. இதுதவிர அறிமுக சலுகையாக 5ஜி டேட்டாவும் பயனர்களுக்கு வழங்கப்படுகிறது. ஜியோ ரூ. 899 சலுகையில் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங்,தினமும் 2.5 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் போன்ற பலன்கள் வழங்கப்படுகிறது. இந்த சலுகையின் வேலிடிட்டி 90 நாட்கள் ஆகும்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo