இந்த புதிய சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் தினமும் 100 எஸ்.எம்.எஸ். பலன்கள் ஏழு நாட்களுக்கு வழங்கப்படுகிறது.ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஜம்மு காஷ்மீரில் ரூ. 102 விலையில் புதிய சலுகையை அறிவித்துள்ளது. அமர்நாத் யாத்திரை செல்வோருக்கு என அறிவிக்கப்பட்டுள்ள
இதுதவிர ரிலையன்ஸ் ஜியோ ரூ. 98 விலையில் வழங்கும் பிரீபெயிட் சலுகையில் பயனர்களுக்கு தினமும் 2 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 300 SMS. உள்ளிட்ட பலன்கள் 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இத்துடன் ரூ. 142 விலையிலும் ஜியோ சலுகை ஒன்றை வழங்குகிறது.
இந்த பயனர்களுக்கு தினமும் 1.5 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் 300 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
ரிலையன்ஸ் ஜியோவின் ரூ. 102 பிரீபெயிட் சலுகை ஜம்மு காஷ்மீர் முழுக்க பல்வேறு விற்பனையாளர்களிடம் கிடைக்கிறது. வாடிக்கையாளர்கள் இதனை அமர்நாத் யாத்திரை நடைபெறும் வரை எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
ஜியோ புதிய சலுகை அமர்நாத் யாத்திரை செல்வோருக்கு என பிரத்யேகமாக அறிவிக்கப்பட்டுள்ளதால், இதில் ஜியோ செயலிகளை பயன்படுத்துவதற்கான வசதி வழங்ப்படவில்லை. இதுதவிர ஜம்மு காஷ்மீர் செல்லும் வாடிக்கையாளர்கள் அப்பகுதியில் புதிய உள்ளூர் இணைப்பைப் பெற்று புதிய சலுகையை பயன்படுத்தலாம்.
அமர்நாத் யாத்திரை செல்வோர் மட்டுமின்றி இந்தியாவில் எந்த பகுதியில் இருந்தும் ஜம்மு காஷ்மீர் செல்லும் வாடிக்கையாளர்கள் புதிய சலுகையை பயன்படுத்திக் கொள்ளலாம்.