ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜியோ புட்பால் ஆஃபர் என்ற பெயரில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய சலுகையில் பல்வேறு பிராண்டு ஸ்மார்ட்போன்களை வாங்குவோருக்கு அதிகபட்சம் ரூபாய்.2,200 வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது.
இந்தியாவில் விற்பனையாகும் 22 ஸ்மார்ட்போன் பிராண்டுகளை சேர்ந்த பல்வேறு ஸ்மார்ட்போன்களுக்கு இந்த சலுகை பொருந்தும் என ஜியோ அறிவித்துள்ளது. ஸ்மார்ட்போன் வாங்குவதோடு ஜியோ எண்களுக்கு தொடர்ச்சியான ரீசார்ஜ் செய்வோருக்கு கேஷ்பேக் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதை மேற்கொள்ள ஜியோ 4ஜி சேவையை ஸ்மார்ட்போன்களில் ஆக்டிவேட் செய்ய வேண்டும். வாடிக்கைாயளர்கள் முதற்கட்டமாக மார்ச் 31, 2018-ம் தேதிக்குள் ரூபாய் 198 அல்லது ரூபாய்.299 செலுத்தி ரீசார்ஜ் செய்ய வேண்டும். ரீசார்ஜ் செய்ததும் ரூ.50 மதிப்புள்ள 44 வவுச்சர்கள் வடிவில் மைஜியோ app யில் கிரெடிட் செய்யப்படும் செலக்ட் செய்யப்பட்ட ஸ்மார்ட்போன்களுக்கு ஜியோ கேஷ்பேக் பொருந்தும். கீழே கொடுக்கப்பட்டுள்ள டேபில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்
முன்னதாக ரெட்மி நோட் 5 மற்றும் நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போன்களை வாங்கும் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு இதே போன்ற கேஷ்பேக் சலுகை அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. வாடிக்கையாளர்களை தக்கவைத்து கொள்ளவும், ஸ்மார்ட்போன் விற்பனையை ஊக்குவிக்கவும் டெலிகாம் மற்றும் ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் இணைந்து கேஷ்பேக் மற்றும் இதர சலுகைகளை அறிவிக்கும் போக்கு அதிகரித்து வருகிறது.