அசத்தும் ஜியோ தொடர்ந்து முன்னணி, ஜியோவை அடுச்சுக்க ஆல் இல்லை.

அசத்தும் ஜியோ  தொடர்ந்து முன்னணி, ஜியோவை அடுச்சுக்க ஆல்  இல்லை.
HIGHLIGHTS

2019-20 ஆண்டிற்கான முதல் காலாண்டு காலத்தில் வோடபோன் ஐடியா வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 32 கோடியாக குறைந்துள்ளது.

இந்திய டெலிகாம் சந்தையில் குறைந்த நாட்களில் மிகவும் அதிக பெயர் பெற்றுள்ளது  என்பது நமக்கு  தெரிந்தே அந்த வகையில்  என்னதான்  மிகவும் பல நிறுவனங்கள் பல ஆண்டாக இருந்து இருந்தாலும் ஜியோ  போன்ற ஒரு வெற்றியை  யாராலும் கொடுக்க முடியவில்லை அதுமட்டுமில்லாமல் வந்த மூன்றே ஆண்டுகளில் முன்னணி டெலிகாம் நிறுவனமாக ரிலையன்ஸ் ஜியோ உருவெடுத்துள்ளது.

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் வருவாய் அறிக்கை முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில் ரிலையன்ஸ் ஜியோ சேவையை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 33.13 கோடி என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மே மாதத்தில் ஏர்டெல் நிறுவனத்தை பின்னுக்குத்தள்ளி இந்திய டெலிகாம் சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ இரண்டாவது இடம்பிடித்தது.

ஜூன் 2019 வரையிலான காலக்கட்டத்தில் வோடபோன் ஐடியா நிறுவனத்தை பின்னுக்குத்தள்ளி ரிலையன்ஸ் ஜியோ முதலிடம் பிடித்துள்ளது. அந்தவகையில் தற்சமயம் ரிலையன்ஸ் ஜியோ சேவையை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 33.13 கோடியாக இருக்கிறது. வோடபோன் ஐடியா வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 32 கோடியாக இருக்கிறது.

2019-20 ஆண்டிற்கான முதல் காலாண்டு காலத்தில் வோடபோன் ஐடியா வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 32 கோடியாக குறைந்துள்ளது. மார்ச் மாதம் வரையிலான காலாண்டில் வோடபோன் ஐடியா வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 33.41 கோடியாக இருந்தது.

வோடபோன் ஐடியா நிறுவனங்கள் டெலிகாம் சேவை வியாபாரத்தை ஒன்றிணைத்த போது, இந்நிறுவனம் சுமார் 40 கோடி வாடிக்கையாளர்களை பெற்று நாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவனமாக மாறியது. எனினும், இந்நிறுவனம் தொடர்ந்து வாடிக்கையாளர்களை இழந்து வருகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo