சத்தமில்லாமல் இந்த திட்டத்தை தட்டி தூக்கிய Jio

Updated on 17-Nov-2022
HIGHLIGHTS

ரிலையன்ஸ் ஜியோவால் இதுபோன்ற பல திட்டங்கள் நிறுத்தப்பட்டன, இதில் டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தா இலவசமாக வழங்கப்பட்டது.

உண்மையில் டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தா திட்டம் விலை உயர்ந்தது. இதற்குப் பிறகு, இலவச டிஸ்னி + ஹாட்ஸ்டார் திட்டம் ஜியோவால் நிறுத்தப்படுகிறது

ஜியோவின் நிறுத்தப்பட்ட திட்டங்களில் ரூ.1,499 மற்றும் ரூ.4,199 திட்டங்களும் அடங்கும்.

சமீபத்திய காலங்களில், ரிலையன்ஸ் ஜியோவால் இதுபோன்ற பல திட்டங்கள் நிறுத்தப்பட்டன, இதில் டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தா இலவசமாக வழங்கப்பட்டது. உண்மையில் டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தா திட்டம் விலை உயர்ந்தது. இதற்குப் பிறகு, இலவச டிஸ்னி + ஹாட்ஸ்டார் திட்டம் ஜியோவால் நிறுத்தப்படுகிறது. முன்னதாக, ரூ.499 மற்றும் ரூ.601 ப்ரீ-பெய்டு திட்டங்கள் ஜியோவால் நிறுத்தப்பட்டன. இருப்பினும், இப்போது மற்ற இரண்டு திட்டங்கள் ஜியோவால் நிறுத்தப்பட்டுள்ளன, இதில் டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது. ஜியோவின் நிறுத்தப்பட்ட திட்டங்களில் ரூ.1,499 மற்றும் ரூ.4,199 திட்டங்களும் அடங்கும்.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா வழங்கும் பிரீபெயிட் சலுகைகளை முழுமையாக நீக்கிவிட்டது. அக்டோபர் மாதத்தில் இருந்தே ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா வழங்கும் ரிசார்ஜ் சலுகைகளை நீக்க துவங்கியது. இதில் முதற்கட்டமாக ரூ. 499 மற்றும் ரூ. 601 சலுகைகள் நீக்கப்பட்டன.

இதை அடுத்து இரு சலுகைகளில் மட்டுமே டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா வழங்கப்பட்டது. இவற்றின் விலை முறையே ரூ. 1,499 மற்றும் ரூ. 4 ஆயிரத்து 199 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. தற்போது இந்த இரு சலுகைகளும் நீக்கப்பட்டுள்ளன. இதனால் இரு சலுகைகளும் ரிலையன்ஸ் ஜியோ வலைதளத்தில் காணப்படவில்லை. இவை மூன்றாம் தரப்பு ரிசார்ஜ் தளங்களிலும் பட்டியலிடப்படவிவல்லை.

அந்த வகையில், இரு சலுகைகளும் சத்தமின்றி நீக்கப்பட்டு விட்டதாகவே தெரிகிறது. முன்னதாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ. 399, ரூ. 419, ரூ. 499, ரூ. 583, ரூ. 601, ரூ. 783, ரூ. 799, ரூ. 1099 மற்றும் ரூ. 1199 விலை சலுகைகளை நீக்கியது. இவை அனைத்திலும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்திய டெலிகாம் சந்தையில் ஜியோவுக்கு போட்டி நிறுவனங்களான ஏர்டெல் மற்றும் வி (வோடபோன் ஐடியா) தொடர்ந்து இந்த சேவைகள் அடங்கிய சலுகைகளை வழங்கும் நிலையில், ஜியோ ஏன் இந்த நடவடிக்கையை எடுத்தது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. ஏர்டெல் மற்றும் வி நிறுவனங்கள் தற்போதும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், அமேசான் பிரைம் மற்றும் நெட்ஃப்ளிக்ஸ் சேவைகள் வழங்கும் ரிசார்ஜ் சலுகைகளை வழங்கி வருகின்றன.

அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் இந்தியன் பிரீமியர் லீக் 2023 (ஐபிஎல் 2023) போட்டிகளை ஒளிபரப்பும் உரிமத்தை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் அங்கமான வியாகாம் 18 கைப்பற்றி இருக்கிறது. டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்ப முடியாது என்பதால், ஜியோ இந்த நடவடிக்கையை மேற்கொண்டு இருக்கலாம் என தெரிகிறது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :