மீண்டும் முதலிடம் பிடித்த Jio, அதிக கஸ்டமர்களை இழந்த Airtel, Vi, BSNL

Updated on 25-Aug-2023
HIGHLIGHTS

ஜூன் மாதத்தில், ஜியோ 22.7 லட்சத்தையும், ஏர்டெல் 14 லட்சம் புதிய வாடிக்கையாளர்களையும் சேர்த்தது.

இந்தியாவில் இந்த போன சந்தாதாரர்களின் எண்ணிக்கை மே மாதத்தில் 117.25 கோடியாக இருந்தது,

BSNL MTNL மற்றும் வோடபோன் ஐடியாவின் சந்தாதாரர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

TRAI யின் புதிய அறிக்கையின்படி, ரிலையன்ஸ் ஜியோ தலைமையிலான ஜூன் மாத இறுதியில் நாட்டில் டெலிகாம் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 1,173.89 மில்லியன் அல்லது சுமார் 117.38 கோடியாக அதிகரித்துள்ளது. ஜூன் மாதத்தில், ஜியோ 22.7 லட்சத்தையும், ஏர்டெல் 14 லட்சம் புதிய வாடிக்கையாளர்களையும் சேர்த்தது.

இந்தியாவில் இந்த போன சந்தாதாரர்களின் எண்ணிக்கை மே மாதத்தில் 117.25 கோடியாக இருந்தது, ஜூன் மாதத்தில் 117.38 கோடியாக அதிகரித்துள்ளது. மாதந்தோறும் 0.11% அதிகரித்துள்ளது. இந்திய டெலிகாம்  ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) தனது மாதாந்திர அறிக்கையில் இந்த புள்ளிவிவரங்களைத் தெரிவித்துள்ளது. இங்கு ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பார்தி ஏர்டெல் சந்தாதாரர்கள் அதிகரித்துள்ள நிலையில், BSNL MTNL மற்றும் வோடபோன் ஐடியாவின் சந்தாதாரர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

BSNL யில் 10 லட்சத்து 87 ஆயிரம் வாடிக்கையாளர்களையும், வோடபோன் ஐடியா 10 லட்சத்து 28 ஆயிரம் வாடிக்கையாளர்களையும் இழந்துள்ளது. அதே நேரத்தில், MTNL யின் 1,52,912 சந்தாதாரர்கள் குறைந்துள்ளனர். ஜூன் மாதத்தில் சேர்க்கப்பட்ட வயர்லெஸ் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 3,73,602 என்று கூறப்படுகிறது. மே 2023 யில் இந்தியாவில் மொத்த வயர்லெஸ் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 114.32 கோடியாக இருந்தது, ஜூன் 2023 இல் இந்த எண்ணிக்கை 114.35 கோடியை எட்டியது. மாதந்தோறும் 0.03 சதவீதம் அதிகரித்துள்ளது.

வயர்லைன் பிரிவில், APFPL வளர்ந்து 6,56,424 புதிய இணைப்புகளைச் சேர்த்தது. அதன் பிறகு ரிலையன்ஸ் ஜியோ 2,08,014 இணைப்புகளைச் சேர்த்தது, பார்தி ஏர்டெல் 1,34,021 இணைப்புகளைச் சேர்த்தது. V-Con Mobile மற்றும் Infra 13,100 இணைப்புகளையும், Tata Teleservices 12,617 மற்றும் Quadrant 6,540 இணைப்புகளையும் சேர்த்தது. பிராட்பேண்ட் சந்தாதாரர்கள் ஜூன் மாதத்தில் 856.81 மில்லியனில் இருந்து 861.47 மில்லியனாக அதிகரித்துள்ளது. மாதந்தோறும் 0.54 சதவீதம் அதிகரித்துள்ளது.

நாட்டின் முதல் ஐந்து சேவை வழங்குநர்கள் 98.37 சதவீத சந்தைப் பங்கைக் கொண்டிருந்தனர். ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் 447.75 மில்லியன் சந்தாதாரர்களுடன் முதலிடத்தில் உள்ளது. பார்தி ஏர்டெல் 248.06 மில்லியனுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்தது. வோடபோன் ஐடியா 124.90 மில்லியனுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. இங்கு BSNL 24.59 மில்லியனுடன் நான்காவது இடத்தில் உள்ளது. ஐந்தாவது இடத்தில் உள்ள ஏட்ரியா கன்வர்ஜென்ஸ் 2.16 மில்லியன் சந்தாதாரர்களைக் கொண்டுள்ளது

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :