ரிலையன்ஸ் ஜியோ கூடுதலாக 11.78 மில்லியன் வாடிக்கையாளர்களை சேர்த்து சாதனை…!

ரிலையன்ஸ் ஜியோ  கூடுதலாக 11.78 மில்லியன் வாடிக்கையாளர்களை சேர்த்து சாதனை…!
HIGHLIGHTS

பல மடங்கு அதிக வாடிக்கையாளர்களை சேர்த்ததால் மற்ற டெலிகாம் நிறுவனங்கள் பதறுகின்றன..!

இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் ரிலையன்ஸ் ஜியோ ஜூலை மாதத்தில் மற்ற நிறுவனங்களை விட சுமார் பத்து மடங்கு அதிக வாடிக்கையாளர்களை சேர்த்து இருப்பதாக தெரிவித்துள்ளது. 

ஜூலை மாதத்தில் மட்டும் டெலிகாம் சந்தை வாடிக்கையாளர்கள் ஒரு சதவிகிதம் அதிகரித்து தற்சமயம் 117.93 கோடியாக அதிகரித்துள்ளது. மொபைல் போன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 115.7 கோடியாக அதிகரித்துள்ளது. ஜூன் மாதத்தில் இருந்து வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 1.17 கோடி அதிகரித்துள்ளது.

https://static.digit.in/default/c79b8db2a6315c411f93f84f7daa25806722ff50.jpeg

ஜியோ மட்டும் பத்து மடங்கு வாடிக்கையாளர்களை அதிகளவு சேர்த்து இருக்கும் நிலையில், மற்ற நிறுவனங்கள் மொத்தமாக 11.53 லட்சம் வாடிக்கையாளர்களையே சேர்த்து இருக்கின்றன.

https://static.digit.in/default/8607e7c48fc69255c0d7f79dbb18b1d83a7a7679.jpeg

வோடபோன் நிறுவனம் 6 லட்சம் வாடிக்கையாளர்களை சேர்த்திருக்கும் நிலையில், பாரதி ஏர்டெல் நிறுவனம் 3.13 லட்சம் வாடிக்கையாளர்களை சேர்த்து இருக்கிறது. BSNL. நிறுவனம் 2.25 லட்சம் மற்றும் ஐடியா செல்லுலார் நிறுவனம் 5,489 வாடிக்கையாளர்களை சேர்த்துள்ளது.

https://static.digit.in/default/ed23832d953bfca37321fb8e549d65d8c14cba01.jpeg

பிராட்பேன்ட் வாடிக்கையாளர்களை பொருத்த வரை ஜூன் மாதத்தில் இருந்து 1.3 கோடி வாடிக்கையாளர்கள் அதிகரித்து ஜூலை மாதத்தில் 46 கோடியாக உள்ளது, மொபைல் பிராட்பேன்ட் கனெக்ட்விட்டிக்கு மட்டும் 44.1 கோடியாக இருக்கிறது.

https://static.digit.in/default/4ebc3f1fd7bd9d96716a0631aee73a94ff1a461c.jpeg

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo