ஹாப்டிக் நிறுவனத்தை சுமார் 700கோடியில் வாங்கிய ரிலையன்ஸ் ஜியோ..!
ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஹேப்டிக் இடையேயான வியாபார ஒப்பந்த மதிப்பு ரூ.700 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஹேப்டிக் இடையேயான வியாபார ஒப்பந்த மதிப்பு ரூ.700 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ டிஜிட்டல் சர்வீசஸ் லிமிட்டெட் ஹேப்டிக் இன்ஃபோடெக் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனத்தின் பெரும்பான்மை (87 சதவிகிதம்) பங்குகளை வாங்கியிருப்பதாக ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் அறிவித்துள்ளது.
ஹேப்டிக் நிறுவனத்தில் பெரும்பான்மை பங்குகள் தவிர மீதம் இருக்கும் பங்குகளை அதன் நிறுவனர்கள் மற்றும் ஊழியர்கள் பங்குகள் அடிப்படையில் வைத்திருப்பர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஹேப்டிக் இடையேயான வியாபார ஒப்பந்த மதிப்பு ரூ.700 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதில் முதற்கட்ட தொகை ரூ.230 கோடியாக இருக்கும் என கூறப்படுகிறது. பெரும்பான்மை பங்குகள் கைமாறியிருந்தாலும், ஹேப்டிக் நிறுவனம் துவங்கப்பட்டதன் நோக்கம் மற்றும் குறிக்கோளை எட்ட தொடர்ந்து பணியாற்றும் என ஹேப்டிக் தெரிவித்துள்ளது. 2013 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட ஹேப்டிக் நிறுவனம் டிஜிட்டல் அசிஸ்டண்ட் சேவையை மேம்படுத்துவதில் தொடர்ந்து கவனம் செலுத்தும் என தெரிவித்துள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ பல்வேறு சாதனங்கள் மற்றும் துறைகளில் ஹேப்டிக் திறமைகளை பயன்படுத்திக் கொள்ளும் என தெரிகிறது. முதலீட்டின் முக்கிய நோக்கம் தளத்தை மேம்படுத்துவது தான் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் ஜியோவுடனான ஒப்பந்தம் காரணமாக 2016 ஆம் ஆண்டு ஹேப்டிக் நிறுவத்தில் முதலீடு செய்த டைம்ஸ் இண்டர்நெட் ஹேப்டிக் வியாபாரங்களில் இருந்து வெளியேறும் என ஹேப்டிக் தெரிவித்துள்ளது.மேலும் இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஹேப்டிக்கின் தற்போதைய சர்வதேச வியாபாரம் மேலும் ஊக்குவிக்கப்படும் என்றும் இந்நிறுவனம் தொடர்ந்து உலகளவில் ஏ.ஐ. சேவைகளை உருவாக்கும் என்றும் கூறப்படுகிறது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile