ரிலையன்ஸ் ஜியோ டெலிகாம் நிறுவனத்தில் இரண்டாம் இடம்
இந்திய டெலிகாம் சந்தையில் 2016 ஆம் ஆண்டு களமிறங்கிய ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் பாரதி ஏர்டெல் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி இரண்டாம் இடம் பிடித்துள்ளது.
இந்திய டெலிகாம் சந்தையில் மே 31 வரையிலான காலக்கட்டத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 82 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை சேர்த்துள்ளது. அந்த வகையில் ஜியோ சேவையை பயன்படுத்தும் மொத்த வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 32.3 கோடியாக இருக்கிறது.
மே மாத இறுதி வரையிலான காலக்கட்டத்தில் டெலிகாம் நிறுவனங்களின் வாடிக்கையாளர் எண்ணிக்கை மற்றும் சந்தை நிலவரங்கள் அடங்கிய அறிக்கையை மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டது. அதில் இந்த விவரங்கள் இடம்பெற்றிருக்கிறது.
38.76 லட்சம் வாடிக்கையாளர்களுடன் வோடபோன் ஐடியா நிறுவனம் இந்திய டெலிகாம் சந்தையில் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது. ரிலையன்ஸ் ஜியோ தவிர பி.எஸ்.என்.எல். நிறுவனம் மட்டும் 24,276 வாடிக்கையாளர்களை சேர்த்துள்ளது.
அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல். 10.28 சதவிகித பங்குகளை கொண்டிருக்கின்றன. இதில் வோடபோன் ஐடியா 33.36 சதவிகிதம், ரிலைன்ஸ் ஜியோ 27.80 சதவிகிதம், பாரதி ஏர்டெல் 27.58 சதவிகிதம் மற்றும் பி.எஸ்.என்.எல். மற்றும் டாடா டெலி நிறுவனங்கள் முறையே 9.98 மற்றும் 0.30 சதவிகித பங்குகளை கொண்டிருக்கின்றன.
சமீபத்திய டிராய் அறிக்கையின் படி இந்தியாவில் மொத்த வயர்லெஸ் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 116.23 கோடியில் இருந்து 116.18 கோடியாக குறைந்திருக்கிறது. மே 31 வரையிலான காலக்கட்டத்தின் படி இந்திய டெலிகாம் சந்தையில் தனியார் நிறுவனங்கள் மட்டும் 89.72 சதவிகித பங்குகளை கொண்டிருக்கின்றன.relin
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile