ஜியோ பிரைம் சந்தாவை ஒரு வருடத்திற்கு இலவசமாக நீடிக்கலாமா அது எப்படி? வாருங்கள் பார்ப்போம்

Updated on 31-Mar-2018
HIGHLIGHTS

ரிலையன்ஸ் ஜியோ பிரைம் சந்தா இன்றுடன் நிறைவுற இருப்பதை தொடர்ந்து பிரைம் சந்தாவை மேலும் ஒரு வருடத்திற்கு இலவசமாக நீட்டிப்பது எப்படி என தொடர்ந்து பார்ப்போம்.

ரிலையன்ஸ் ஜியோ பிரைம் சந்தா கடந்த ஆண்டு மார்ச் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. ரூ.99 தொகையை ஒருமுறை செலுத்தி, ஆண்டு முழுக்க ஜியோ பிரைம் சேவைகளை வாடிக்கையாளர்கள் பெற முடியும் என அறிவிக்கப்பட்டது. 

ரிலையன்ஸ் ஜியோ பிரைம் சந்தா இன்றுடன் (மார்ச் 31) நிறைவு பெற இருக்கும் நிலையில், ஜியோ வாடிக்கையாளர்களுக்கு சர்ப்ரைஸ் அறிவிப்பை ஜியோ வெளியிட்டிருக்கிறது. ஜியோ பிரைம் வாடிக்கையாளர்களுக்கு பிரைம் சேவையில் இணையாத வாடிக்கையாளர்களை விட கூடுதல் நன்மைகளை ஜியோ வழங்கி வருகிறது.

பிரைம் வாடிக்கையாளர்கள் வழங்கி வரும் ஆதரவினை ஜியோ பெருமளவு மதிப்பதால், தொடர்ந்து கூடுதல் நன்மைகள் வழங்கப்படும் என ஜியோ அறிவித்து இருக்கிறது. மேலும் இதுவரை இல்லாதளவு புதிய சலுகைகளை ஜியோ வழங்கும் என தெரிவித்துள்ளது. புதிய ஜியோ வாடிக்கையாளர்களுக்கு பிரைம் சந்தா ஆண்டு கட்டணம் ரூ.99 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தற்போதைய ஜியோ பிரைம் சந்தாதாரர்கள் மேலும் ஒரு வருடத்திற்கு பிரைம் சந்தாவை நீட்டிக்க என்ன செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம். (பிரைம் வாடிக்கையாளர்கள் மார்ச் 31, 2018 அல்லது அதற்கும் முன் இணைந்தவர்கள்)

– மை ஜியோ செயலியை டவுன்லோடு செய்ய வேண்டும்

– செயலியின் முகப்பில் காணப்படும் பிரைம் சந்தாவை நீட்டிக்க கோரும் விளம்பர பேனரில் கிளிக் செய்ய வேண்டும்

– உங்களின் மொபைல் நம்பரை உறுதி செய்து, தொடர வேண்டும்

– ஜியோ பிரைம் சந்தாவை ஒரு வருடத்திற்கு நீட்டிப்பதற்கான உங்களது விருப்பம் பதிவு செய்யப்படிருக்கும்

– இனி பிரைம் சந்தா நீட்டிக்கப்பட்டதை உறுதி செய்யும் குறுந்தகவல் இன்று மாலை அல்லது நாளை வரும்

– பிரைம் சந்தா வழங்கும் சலுகைகளை தொடர்ந்து பயன்படுத்தலாம்

புதிய பிரைம் வாடிக்கையாளர்கள் ( ஏப்ரல் 1, 2018 அல்லது அதற்கு பின் இணைபவர்கள்)

– ஜியோ பிரைம் சந்தாவில் இணைய ரூ.99 ஆண்டு சந்தா செலுத்த வேண்டும்

– முன்னதாக ஜியோ சேவையில் சுமார் 16 கோடி ஜியோ வாடிக்கையாளர்கள் பிரைம் சேவையை பயன்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டது. தற்சமயம் பிரைம் சேவையை சுமார் 17.5 கோடி பேர் பயன்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

– ஜியோ பிரைம் வாடிக்கையாளர்களுக்கு 20% முதல் 50% வரை கூடுதல் சலுகைகள் மற்றும் 550க்கும் அதிக நேரலை டிவி சேனல்கள், 6000க்கும் அதிகமான திரைப்படங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் வழங்கப்படுகிறது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :