Realme பிராண்டு ரியல்மி எக்ஸ்ட்ரா டேஸ் சிறப்பு விறப்னையை அறிவித்துள்ளது. இதில் ரியல்மி பிராண்டின் தேர்வு செய்யப்பட்ட ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு விலை குறைப்பு வழங்கப்படுகிறது. ரியல்மியின் சிறப்பு விற்பனை பிப்ரவரி 29-ம் தேதி நிறைவுறுகிறது.
சிறப்பு விற்பனையின் கீழ் ரியல்மி எக்ஸ், ரியல்மி எக்ஸ்.டி. மற்றும் ரியல்மி 5 ப்ரோ உள்ளிட்ட ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ரியல்மி எக்ஸ் சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கு அதிகபட்சம் ரூ. 2000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
ரியல்மி எக்ஸ்.டி. மாடல் விலை ரூ. 1000 வரை குறைக்கப்பட்டுள்ளது. ரியல்மி 5 ப்ரோ 5 ஜி.பி. மாடல் ரூ. 11,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. புதிய விலை குறைப்பு பற்றிய அறிவிப்பினை ரியல்மி தலைமை செயல் அதிகாரி மாதவ் சேத் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார்.
இதேபோன்று ரியல்மி 5 ப்ரோ ஸ்மார்ட்போனின் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 11,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மற்றும் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல்களுக்கு எவ்வித விலை குறைப்பும் அறிவிக்கப்படவில்லை.
விலை குறைப்பின்படி ரியல்மி எக்ஸ் 4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 14,999 விலையிலும், 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 17,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. புதிய விலை ரியல்மி அதிகாரப்பூர்வ வலைதளம், அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் உள்ளிட்ட தளங்களில் ஏற்கனவே மாற்றப்பட்டு இருக்கிறது.
ரியல்மி எக்ஸ்.டி. 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 14,999 விலையிலும், 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 15,999 விலையிலும், 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 17,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் பியல் புளூ மற்றும் பியல் வைட் நிறங்களில் கிடைக்கிறது.