BSNLக்கு கைகொடுத்த ஜாம்பவான் ரத்தன் டாட்டா இன்று 5G டெஸ்டிங் வரை முன்னேற்றம்

BSNLக்கு கைகொடுத்த ஜாம்பவான் ரத்தன் டாட்டா இன்று 5G டெஸ்டிங் வரை முன்னேற்றம்
HIGHLIGHTS

BSNL மீண்டு வருமா என்ற நிலையில் இன்று 5G டெஸ்டிங் செய்து வருகிறது

முக்கிய பங்கு ரத்தன் டாட்டா அவைகளையே சேரும் ரத்தன் டாடா மீண்டும் பிஎஸ்என்எல்-க்கு உயிர் கொடுத்துள்ளார்

ரத்தன் டாடாவின் முதலீட்டுக்குப் பிறகு, பிஎஸ்என்எல் தனது நெட்வொர்க்கை மிக வேகமாக விரிவுபடுத்துகிறது

Jio, Airtel, Vodafone சில மாதங்களுக்கு முன்பு அதன் விலையை அதிகரித்தது அதன் பிறகு நடுத்தர மக்கள் அதிக சிரமத்துக்கு உள்ளகினர்கள் இதன் காரணமாக அதிகபடியான மக்கள் BSNL யில் மாறுவதற்கு பார்த்து கொண்டிருந்தார்கள் BSNL மீண்டு வருமா என்ற நிலையில் இன்று 5G டெஸ்டிங் செய்து வருகிறது என்றால் அதன் முக்கிய பங்கு ரத்தன் டாட்டா அவைகளையே சேரும் ரத்தன் டாடா மீண்டும் பிஎஸ்என்எல்-க்கு உயிர் கொடுத்துள்ளார். ரத்தன் டாடாவின் முதலீட்டுக்குப் பிறகு, பிஎஸ்என்எல் தனது நெட்வொர்க்கை மிக வேகமாக விரிவுபடுத்துகிறது. அப்படி என்ன செய்தார் என்று பார்க்கலாம்

BSNLக்கு கைகொடுத்த ரத்தன் டாட்டா

TATA கன்சல்டன்சி சர்விஸ் (TCS) சில நாட்களுக்கு முன்பு 15 ஆயிரம் கோடி வழங்கியது பிஎஸ்என்எல் 4ஜிக்கான டேட்டா சென்டரை அமைப்பதே நிறுவனத்தின் பணியாக இருந்தது. நான்கு முக்கிய துறைகளுக்காக இந்த முதலீடு செய்யப்பட்டது. உண்மையில், இந்தியாவில் BSNL 4G நெட்வொர்க் இல்லாத பல பகுதிகள் இன்னும் உள்ளன, மேலும் இந்த நெட்வொர்க்கை நிறுவ அரசாங்கத்தால் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

TATA-BSNL உடன் சேர்ந்து வருவதற்கு முக்கியக் காரணம், இந்திய மக்கள் வேகமான இன்டர்நெட் பெற வேண்டும், குறைந்த விலையில் அதைப் பெற வேண்டும் என்பதே. அதாவது முன்பு இந்தியாவில் பாஸ்ட் இன்டர்நெட் பெற அதிக பணம் தர வேண்டி இருக்கும், ஆனால் படிப்படியாக அதை சரி செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 1 ஆயிரம் கிராமங்களில் வேகமான இன்டர்நெட் வழங்க பிஎஸ்என்எல் பரிசீலித்து வருகிறது. இந்த கிராமங்களைப் பற்றி பேசுகையில், 3G சேவை இன்னும் இங்கே கிடைக்கிறது மற்றும் BSNL இங்கு அதிகபட்ச பயனர் தளத்தைக் கொண்டுள்ளது.

இதுபோன்ற இடங்களில் BSNL அதிகமாக இருப்பதற்கான காரணம், அதன் திட்டங்கள் மிகவும் குறைந்த விலை மற்றும் பயனர்கள் காலிங் மற்றும் இன்டர்நெட்டிற்கு அதிக பணம் செலவழிக்க வேண்டியதில்லை. கூட்டாண்மைக்குப் பிறகு, டாடா பிஎஸ்என்எல் நிறுவனத்தை வாங்கியதாக செய்திகள் பரவ ஆரம்பித்தன. அதேசமயம் நிறுவனம் முதலீடு மட்டுமே செய்து, டேட்டா மையத்தை உருவாக்க முடிவு எடுக்கப்பட்டது. டாடா-பிஎஸ்என்எல் கூட்டாண்மை காரணமாக டெலிகாம் துறையில் ஒரு புரட்சி தொடங்கியது

இதையும் படிங்க:ரத்தன் டாட்டாவின் இறுதி வார்த்தையை ஷேர் செய்த Google CEO சுந்தர் பிச்சை

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo