4G மேம்பாட்டுக்கு சீன உபகரணங்ள் எங்களுக்கு வேண்டாம் BSNL அதிரடி.
4ஜி மேம்படுத்தல்களில் சீன உபகரணங்களை நிராகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
பாதுகாப்பு பிரச்சினைகள் இருப்பதால் சீன உபகரணங்களைப் பயன்படுத்த வேண்டாம்
லடாக்கில் பெரும் பதற்றத்திற்கு மத்தியில் அரசு இத்தகைய முடிவை எடுத்துள்ளது
அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் தொலைதொடர்பு துறை நிறுவனம் 4ஜி மேம்படுத்தல்களில் சீன உபகரணங்களை நிராகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
பாதுகாப்பு பிரச்சினைகள் இருப்பதால் சீன உபகரணங்களைப் பயன்படுத்த வேண்டாம் என்று "பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு கூற மத்திய அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
லடாக்கில் பெரும் பதற்றத்திற்கு மத்தியில் அரசு இத்தகைய முடிவை எடுத்துள்ளது. சீன நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட சாதனங்களின் நெட்வொர்க் பாதுகாப்பு எப்போதும் சந்தேகத்திற்குரியது என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தொலைதொடர்பு நிறுவனங்களான பாரதி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகியவை தங்களது தற்போதைய நெட்வொர்க்குகளில் ஹூவாய் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றி வருகின்றன, அதே நேரத்தில் இசட்இஇ நிறுவனம் அரசு நடத்தும் பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுகிறது.
இதுதொடர்பாக மறு டெண்டர் விடவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சீன நிறுவனங்களால் தயாரிக்கப்படும் உபகரணங்களை பயன்படுத்துவதை குறைக்க தனியார் ஆபரேட்டர்களைக் கேட்டுக்கொள்ளவும் மத்திய அரசு பரிசீலினை செய்து வருகிறது
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile