இலவச Netflix சபஸ்க்ரிப்ஷன் பெற தனியாக எந்த ரீச்சார்ஜ் செய்ய வேண்டாம் Jioவின் இந்த பிளான் போதும்.

Updated on 19-Apr-2023
HIGHLIGHTS

நெட்பிளிக்ஸ் ஒரு வீடியோ ஸ்ட்ரீமிங் பிளாட்பாரம் ஆகும்

நெட்ப்ளிக்சின் மாதாந்திர ரீச்சார்ஜ் திட்டம் 149 ரூபாயிலிருந்து ஆரம்பமாகிறது.

ரிலையன்ஸ் ஜியோவின் சில திட்டங்களில் Netflix சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது

நெட்பிளிக்ஸ் ஒரு வீடியோ ஸ்ட்ரீமிங் பிளாட்பாரம் ஆகும், நெட்ப்ளிக்ஸை பார்ப்பதற்க்கு மாதாந்திர ரீச்சார்ஜ் செய்ய வேண்டி இருக்கும், நெட்ப்ளிக்சின் மாதாந்திர ரீச்சார்ஜ் திட்டம் 149 ரூபாயிலிருந்து ஆரம்பமாகிறது. அதுவே  அதன் பிரிமியம்  பிரீமியம் ரீசார்ஜ் திட்டம் ரூ.649 ஆகும். ஆனால் நீங்கள் Netflix ஐ இலவசமாகப் பார்க்கலாம் . ஆம், நீங்கள் ரிலையன்ஸ் ஜியோ பயனர்களாக இருந்தால், நீங்கள் Netflix ஐ இலவசமாகப் பார்க்கும் வாய்ப்பு உள்ளது. ரிலையன்ஸ் ஜியோவின் சில திட்டங்களில் Netflix சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது.

ஜியோ ரூ,799 பிளான்

இந்த திட்டத்தில் இலவச Netflix, Amazon Prime Video சபஸ்க்ரிப்ஷன் வழங்குகிறது.ஆகமொத்தம் இதில் 150GB டேட்டா வழங்குகிறது. அதேசமயம் டேட்டா தீர்ந்த பிறகு, ஒரு ஜிபி டேட்டாவுக்கு ரூ.10 வசூலிக்கப்படும். இந்த திட்டத்தில் அன்லிமிடெட் காலிங் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் வசதியும் உள்ளது. இந்த திட்டத்தில் இரண்டு சிம்களை சேர்க்கலாம்.

ஜியோ ரூ,999 திட்டம்.

இந்த திட்டத்தில் இலவச நெட்ப்ளிக்ஸ்  மற்றும் அமேசான் ப்ரைம் சபஸ்க்ரிப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது. ஜியோவின் ரூ.999 திட்டத்தில் 200 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இதனுடன் அன்லிமிடெட் கால் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் வசதியும் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் மூன்று சிம்களை சேர்க்கலாம்.

ஜியோ ரூ,1,499 திட்டம்.

இந்த திட்டத்தில் இலவச நெட்ப்ளிக்ஸ் மற்றும் அமேசான் ப்ரைம் சபஸ்க்ரிப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த திட்டத்தில் கிடைக்கும் அன்லிமிடெட் உடன் இன்டர்நெஷனல் ரோமிங் நன்மையும் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் ஆகமொத்தம் 300GB டேட்டா வழங்கப்படுகிறது.இதனுடன் இந்த திட்டத்தில் 100 SMS நன்மையும் வழங்கப்படுகிறது, ஆனால் இது ஒரு போஸ்ட்பெய்டு திட்டமாகும்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :