சாம் ஆல்ட்மேனுக்கு சவால் விட்ட அம்பானி நாங்களும் புதிய Ai சிஸ்டத்தை கொண்டு வருவோம்

Updated on 29-Aug-2023
HIGHLIGHTS

ஆல்மேன் Chatgpt போன்ற AI கருவியை இந்தியர்களால் உருவாக்க முடியாது என்று கூறினார்.

. இந்திய பயனர்களுக்கு ChatGPT போன்ற புதிய AI அமைப்புகளை உருவாக்கும் என்று அம்பானி அறிவித்தார்.

இன்று, ஜியோ அனைத்து இந்தியர்களுக்கும் AI இணைப்பை வழங்குவதாக உறுதியளிக்கிறது.

சாட்ஜிபிடியை உருவாக்கிய சாம் ஆல்மேன், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இந்தியாவை அவமானப்படுத்தி, Chatgpt போன்ற AI கருவியை இந்தியர்களால் உருவாக்க முடியாது என்று கூறினார். அப்படிச் செய்தால் நிச்சயம் தோல்வியடைவார்கள். ஆனால் இப்போது முகேஷ் அம்பானி சாம் ஆல்ட்மேனின் பெருமையை உடைக்கப் போகிறார். சாம் ஆல்மேட்டனின் சவாலை முகேஷ் அம்பானி ஏற்றுக்கொண்டார். இந்திய  பயனர்களுக்கு ChatGPT  போன்ற புதிய  AI அமைப்புகளை  உருவாக்கும் என்று  அம்பானி  அறிவித்தார்., ஜியோ அனைவருக்கும்  அனைத்து  இடங்களிலும் AI என  கிடைக்கும் உறுதியளிக்கிறது. 

அல்டிமேன்  கேலி  செய்தார்

ஆல்ட்மேன் சமீபத்தில் ChatGPT பற்றி கூறியது இந்தியர்களுக்கு அவமானம். சாம் ஆல்ட்மேன் இந்தியர்கள் AI போன்ற கருவிகளை உருவாக்குவது குறித்து சந்தேகம் தெரிவித்த பிறகு நிறைய விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

இந்தியாவுக்கு முழு அதிகாரம் உள்ளது

AI கருவிகளை உருவாக்க இந்தியாவிடம் முழு வலிமையும் தொழில்நுட்ப அறிவும் உள்ளது என்று முகேஷ் அம்பானி கூறினார். இந்தியாவில் AI அடிப்படையிலான தீர்வை உருவாக்கும் நோக்கில் Jio இயங்குதளங்கள் செயல்பட்டு வருவதாகவும், இதனால் இந்திய குடிமக்கள் மற்றும் பிஸ்னஸ் AI யின் பலனைப் பெற முடியும் என்றும் அவர் கூறினார். இந்தியாவிற்கு திறன், டேட்டா மற்றும் திறமை உள்ளது என்று கூறினார்.

.இருப்பினும், AI யின் மகத்தான கணக்கீட்டு கோரிக்கைகளை கையாளும் திறன் கொண்ட "வலுவான டிஜிட்டல் உள்கட்டமைப்பின்" அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார். இந்த சவாலுக்கு விடையளிக்கும் வகையில், நிலைத்தன்மை மற்றும் சுற்றுச்சூழல் பொறுப்புக்கான உறுதிப்பாட்டை பராமரிக்கும் அதே வேளையில், கிளவுட் மற்றும் எட்ஜ் இடங்களை உள்ளடக்கிய, "2000 மெகாவாட் வரை AI- தயார் கம்ப்யூட்டிங் திறனை" உருவாக்குவதற்கு RIL உருதியளுக்கும் என்று அவர் கூறினார்.

முகேஷ் அம்பானி கூறிய  உறுதி

முகேஷ் அம்பானி கூறுகையில், சுமார் 7 ஆண்டுகளுக்கு முன்பு, ஜியோ அனைவருக்கும் இண்டநெட் மற்றும் பிராட்பேண்ட் இன்டர்நெட் வழங்குவதாக உறுதியளித்தது. இன்று, ஜியோ அனைத்து இந்தியர்களுக்கும் AI இணைப்பை வழங்குவதாக உறுதியளிக்கிறது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :