digit zero1 awards

Moto G Play (2023) ஸ்மார்ட்போன் அமெரிக்காவில் அறிமுகம், விலை சிறப்பம்சம் தெரிஞ்சிக்கோங்க.

Moto G Play (2023) ஸ்மார்ட்போன் அமெரிக்காவில் அறிமுகம், விலை சிறப்பம்சம் தெரிஞ்சிக்கோங்க.
HIGHLIGHTS

மோட்டோரோலா தனது கடைசி போனை இந்த ஆண்டு அறிமுக செய்ய முடிவு செய்தது

டிசம்பர் 15 ஆம் தேதி மோட்டோ X40 ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது

மோட்டோரோலா மோட்டோ ஜி பிளே 2023 ஸ்மார்ட்போன் டீப் இண்டிகோ எனும் ஒற்றை நிறத்தில் மட்டுமே கிடைக்கிறது

இந்த ஆண்டின் இறுதி மாதத்தை தொடர்ந்து மோட்டோரோலா தனது கடைசி போனை இந்த ஆண்டு அறிமுக செய்ய முடிவு செய்தது. Lenovo-க்கு சொந்தமான நிறுவனம் Moto G Play (2023) ஐ அறிமுகப்படுத்தியுள்ளது, ஆனால் இந்திய வாங்குபவர்கள் உற்சாகமடைய வேண்டாம், ஏனெனில் இந்த போன் தற்போதைக்கு அமெரிக்காவில் கிடைக்கும். Motorola புதிய Moto G Play (2023) ஐ மற்ற சந்தைகளுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதா என்பது பற்றி ஒரு வார்த்தை கூட கூறவில்லை.

மோட்டோரோலா நிறுவனம் சீன சந்தையில் புதிய மோட்டோ X40 ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனின் வெளியீட்டை உறுதிப்படுத்தி இருக்கிறது. அதன்படி டிசம்பர் 15 ஆம் தேதி மோட்டோ X40 ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் வழங்கப்படுகிறது. இந்த அறிவிப்பை தொடர்ந்து அமெரிக்காவில் புது மோட்டோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகி இருக்கிறது.

விலை மற்றும் விற்பனை விவரங்கள்: 

மோட்டோரோலா மோட்டோ ஜி பிளே 2023 ஸ்மார்ட்போன் டீப் இண்டிகோ எனும் ஒற்றை நிறத்தில் மட்டுமே கிடைக்கிறது. இதன் விலை 170 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 13 ஆயிரத்து 992 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை டிசம்பர் 12 ஆம் தேதி துவங்குகிறது.

மோட்டோரோலா சிறப்பம்சம்.

மோட்டோரோலா நிறுவனத்தின் 2nd Gen மோட்டோ ஜி பிளே ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் 6.5 இன்ச் IPS TFT LCD HD+ 720×1600 பிக்சல் ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் ஹீலியோ G37 பிராசஸர், 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

புகைப்படங்களை எடுக்க 16MP பிரைமரி கேமரா, 2MP மேக்ரோ கேமரா, 2MP டெப்த் கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஆண்டராய்டு 12 ஒஎஸ், 5000 எம்ஏஹெச் பேட்டரி, 10 வாட் சார்ஜிங் 3.5mm ஹெட்போன் ஜாக், பின்புறம் கைரேகை சென்சார், IP52 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo