BSNL . அறிவித்து வழங்கி வந்த 2 ஜிபி இலவச சலுகை செப்டம்பர் வரை நீடிக்கும்…!

BSNL . அறிவித்து வழங்கி வந்த 2 ஜிபி இலவச சலுகை செப்டம்பர் வரை நீடிக்கும்…!
HIGHLIGHTS

BSNL . அறிவித்து வழங்கி வந்த 2 ஜிபி இலவச டேட்டா செப்டம்பர் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. BSNL . வழங்கி வரும் 10 பிரபல பிரீபெயிட் சலுகைகளில் வழங்கப்பட்ட டேட்டாவுடன், 2 ஜிபி கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது

BSNL . அறிவித்து வழங்கி வந்த 2 ஜிபி இலவச டேட்டா செப்டம்பர் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. BSNL . வழங்கி வரும் 10 பிரபல பிரீபெயிட் சலுகைகளில் வழங்கப்பட்ட டேட்டாவுடன், 2 ஜிபி கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது. மான்சூன் ஆஃபர் என்ற பெயரில் அறிவிக்கப்பட்ட கூடுதல் டேட்டா ஜியோவின் டபுள் தமாக்கா ஆஃபருக்கு போட்டியாக ஜூன் மாதத்தில் அறிவிக்கப்பட்டது. 

இந்த சலுகை ரூ.186,ரூ.429, ரூ.485, ரூ.666 மற்றும் ரூ.999 பிரீபெயிட் ரீசார்ஜ்களில் வழங்கப்படுகிறது. இதே போன்று கூடுதல் 2 ஜிபி டேட்டா ரூ.187, ரூ.333, ரூ.349, ரூ.444 மற்றும் ரூ.448 விசேஷ சலுகைகளிலும் வழங்கப்படுகிறது. உண்மையில் மான்சூன் ஆஃபர் இந்தியா முழுக்க 60 நாட்களுக்கு அறிவிக்கப்பட்டது.

https://static.digit.in/default/82c19843b2167e12131f050ac73a69411fa55f4f.jpeg

தற்சமயம் BSNL . இதற்கான வேலிடிட்டியை செப்டம்பர் 15 வரை நீட்டித்துள்ளது. இந்த சலுகைBSNL ரீசார்ஜ் பேக்கள் ரூ.186, ரூ.429, ரூ.666 மற்றும் ரூ.999 மற்றும் விசேஷ சலுகைகளான ரூ.187, ரூ.333, ரூ.349, ரூ.444 மற்றும் ரூ.448 வழங்கப்படுகிறது.

இதன்மூலம் ரூ.186 ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு தினமும் 3 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. முன்னதாக 28 நாட்களுக்கு தினமும் 1 ஜிபி டேட்டா மட்டுமே வழங்கப்பட்டு கிடைத்தது இதேபோன்று ரூ.444 விலையில் சலுகையை செலக்ட் செய்யும் பயனர்களுக்கு தினமும் 6 ஜிபி டேட்டா 60 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த சலுகையில் முன்னதாக 4 ஜிபி டேட்டா வழங்கப்பட்டது.

https://static.digit.in/default/b640de8db43e92148ac4d758622b23d02bad6f44.jpeg

2 ஜிபி கூடுதல் டேட்டா மட்டுமின்றி, அன்லிமிட்டெட் லோக்கல் , STD மற்றும் ரோமிங் கால்கள் எவ்வித கட்டுப்பாடும் இன்றி வழங்கப்படுகிறது. இத்துடன் தினமும் 100 SMS . வழங்கப்படுகிறது. BSNL . சேவையை வழங்கி வரும் அனைத்து வட்டாரங்களிலும் 2 ஜிபி கூடுதல் டேட்டா சலுகை பொருந்தும்.

பி.எஸ்.என்.எல். நெட்வொர்க்கில் இதுவரை 3ஜி சேவை மட்டுமே வழங்கப்படுகிறது என்பதும் கவனிக்கத்தக்க ஒன்று. மற்ற நிறுவனங்கள் அதிவேக 4ஜி நெட்வொர்க் சேவையை வழங்கி வருகின்றன. BSNL சார்பில் அறிவிக்கப்பட்ட இலவச டேட்டா நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ஜியோ டபுள் தமாக்கா ஆஃபர் ஜூன் 30-ம் தேதியுடன் நிறுத்தப்பட்டது.

ஜியோ இலவசமாக வழங்கிய கூடுதல் டேட்டா பயனர்களுக்கு தினமும் 1.5 ஜிபி அளவு கூடுதல் டேட்டாவினை தினமும் வழங்கிவந்தது. மேலும் ஜியோ பயனர்களுக்கு அதிவேக 4ஜி டேட்டா வழங்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo